தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் ஆண்டனி.இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை ஆரம்பித்த இவர் நான் திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.

இந்த படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு ஹிட் அடித்ததால் விஜய் ஆண்டனி படங்கள் நடிப்பதில் அதிகமான கவனம் செலுத்த ஆரம்பித்தார்.இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றது என்றுதான் சொல்லவேண்டும்.

2014 ஆம் ஆண்டு இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் திரைப்படம் அதிரிபுதிரி வெற்றி பெற்றது.இதன் வெற்றிகாரணமாக தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

அம்மா பாசத்தை மையப்படுத்தி வெளிவந்த முதல் பாகத்திற்கு ஈடு கொடுக்கும் அளவிற்கு இந்த படத்திலும் செண்டிமெண்ட் காட்சிகள் இருக்கும் என கூறி இருந்தார்.

இந்தநிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இரவு பகலாக நடந்து கொண்டுள்ளது.தற்போது படப்பிடிப்பின் பொது விஜய் ஆண்டனிக்கு விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் இருக்கும் இவர் விரைவில் குணமடைந்து சிகிச்சை முடிந்தபின்னர் வீடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

By Spyder

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *