சென்னை நூர் மார்க்கெட் பகுதியில் வசித்து வந்தவர் ரமேஷ். இவர் டிக் டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக செயல்பட்டுவந்தார்.
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றிலும் பங்கேற்று வந்தார். பொங்கல் தினத்தில் வெளியான அஜித்தின் துணிவு படத்தில் நடனம் ஆடியிருந்தார். வரவிருக்கும் ரஜினிகாந்தின் ஜெயிலர் படத்திலும் நடனம் ஆடியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
டான்ஸர் ரமேஷிற்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இவர் முதல் மனைவி நூர் மார்க்கெட் பகுதியில் வசித்துவருகிறார். இவர் முதல், இரண்டாவது மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார்.
ரமேஷிற்கு இன்று பிறந்தநாள் ஆகும். இந்த நிலையில், புளியந்தோப்பில் உள்ள குடியிருப்பு பகுதியின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து த ற் கொ லை செய்துகொண்டார்.
ரமேஷின் மரணம் அவரது ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. ரமேஷ் சினிமா பாடல்களுக்கு நடனமாடி அதனை டிக் டாக்கில் பதிவேற்றி ஏராளமான ரசிகர்களை பெற்றிருற்தார்.
அவரின் ம ர ணம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து வி சாரணை நடத்திவருகின்றனர்.