சித்ரா போல் இருக்கும் இளம் பெண் இந்த பிரபல நடிகையின் பேத்தியா ?? நம்பவே முடியல !! வைரலாகும் புகைப்படம் இதோ !!

செய்திகள்

மறைந்த நடிகை சித்ரா போன்று இருக்கும் கீர்த்தனா தினகர் யார் என்பது குறித்த தகவல் தீயாய் பரவி வருகிறது.

சாஃப்ட்வேர் இன்ஜீனியரான கீர்த்தனா, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 2ல் பங்கேற்றது தெரிய வந்துள்ளது.

மேலும் இவர் விஜே சித்துவுக்கு ஏற்கனவே பரிட்சயமானவர் என்றும் தெரியவந்துள்ளது.

அதோடு கீர்த்தனா பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரியின் பேத்தி என்பதும் தெரியவந்துள்ளது.

பழம் பெரும் நடிகையான ஷண்முக சுந்தரி பல்வேறு தமிழ் படங்களில் நடித்துள்ளார். மிடில் கிளாஸ் மாதவன் படத்தில் வடிவேலுவுக்கு அம்மாவாக நடித்திருப்பார்.

ஷண்முக சுந்தரியின் ஐந்தாவது மகளான செல்வியின் மகள்தான் இந்த கீர்த்தனா என்றும் அவர் குழந்தையாக அவரது பாட்டியுடன் இருந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.