“சொல்வதெல்லாம் உண்மை”க்கு வந்த சோதனை..? – இனி இவங்க வாய் திறந்தா புடிச்சு ஜெயில்ல போட்ருவாங்க! ஏன் தெரியுமா?

Uncategorized சினிமா

கட்டபஞ்சயத்து முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில், திருமண உறவில் மூன்றாவது நபர் தலையிடுவது சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் வடமாநிலங்களில் சட்டத்திற்கு புறம்பான வகையில்  “காப் பஞ்சாயத்து”  என்று அழைக்கப்படும் கட்ட பஞ்சாயத்து முறை வழக்கத்தில்  இருந்து வருகிறது.

திருமணம் முடிந்த தம்பதிக்கு எதிராக கடைப்பிடிக்கப்படும் கொள்கைகளை கொண்டது இந்த பஞ்சாயத்து முறை.

இதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரி “சக்தி வாஹினி” எனப்படும் அரசு சார்பற்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளான  தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர் மற்றும் டி.ஒய். சந்திரசூட் ஆகிய 3 பேர் கொண்ட நீதிபதி அமர்வு இந்த மனுவினை நேற்று விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில், ” தங்கள் மனதிற்கு பிடித்து திருமணம் செய்து கொண்ட தம்பதியின் திருமணத்திற்கு எதிராக, எந்தவொரு சட்டவிரோத முறையில் கட்டப்பஞ்சாயத்துகள் நடத்துவதற்கு அனுமதி இல்லை.

இது தொடர்பாக அரசு சட்டவிதிகளை உருவாக்கும் வரையில், இதுபோன்ற கட்டப்பஞ்சாயத்தினை நடத்தினால் தண்டனை விதிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து அமலில் இருக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் இதையே தான், கொஞ்சம் ஹை-டெக்காக செய்து வரும் நிலையில், யாரேனும் இது தொடர்பாக வழக்கு தொடரும் பட்சத்தில் நடவடிக்கைகள் பாயும்.

Thanks for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.