சிவானி நாராயணனை தெரியாதவர்கள் யாருமே இருக்க முடியாது அந்த அளவிற்கு அவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருந்தார். இவர் சீரியலில் நடித்துக் கொண்டிருந்தார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
ஆனால் இவர் மேலும் தன்னை சினிமாவில் ஈடுபடுத்தி கொள்வதற்கு தன்னை பிரபலப்படுத்தி தன் திறமையை வெளிப்படுத்துவதற்காகவே தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் நான்கில் கலந்து கொண்டுள்ளார்.இவர் பிக் பாஸ் வீட்டில் மிகவும் அமைதியாகவே இருந்து வருகிறார்.
பெரிய அளவில் இவரால் இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் வந்ததில்லை. தனக்கு கிடைக்கும் வாய்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நடனமாடவது, ராம்ப் வாக் செல்வது என சரியாக பயன்படுத்தி கொண்டு வருகிறார்.
இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பே நடிகர் தனுஷுக்காக பட்டாசு திரைப்படத்திலிருந்து ஜித்து ஜில்லாடி என்ற பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
மேலும் அந்த பாடலுக்கு ரெட் கலர் கோடு போட்ட டீசர்ட் மற்றும் கருப்பு நிற கட்டம் போட்ட பேண்ட் அணிந்து டான்ஸ் ஆடியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.