தல அஜீத் மகன் ஆத்விக்கா இது ?? என்னம்மா வளர்ந்துட்டாருனு பாருங்க !! அப்படியே பார்க்க தல மாதிரியே இருக்காரே !!

செய்திகள்

தமிழ் சினிமாவின் தல் என்று கொண்டாடப்படும் நடிகர் அஜித். இவர் நடிப்பில் கடந்த வருடம் விஸ்வாசம் நேர்கொண்ட பார்வை ஆகிய படங்கள் வந்தது.

இந்த இரண்டு படங்களுமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதை தொடர்ந்து அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அஜித்தை பொருத்தவரை அவர் உண்டு அவர் வேலை உண்டு என இருப்பதால் பொது இடங்களுக்கு பெரும்பாலும் வருவது இல்லை. அதேபோல் தான் தனது குடும்பத்தையும் வைத்து இருப்பார்.

இதையும் மீறி மால்கள், விமான நிலையங்கள், திரையரங்குகள் என அவர்கள் செல்லும்போது இவர்களுடன் யாராது செல்பி எடுத்துக் கொள்ள நினைத்தால் உடனே எந்த தடையும் இன்றி போஸ் கொடுப்பார்கள்.

தற்போது தல அஜித் வலிமை படத்தில் மும்முரமாக நடித்து வரும் நிலையில் இவரது மகன் ஆத்விக் மற்றும் மனைவி ஷாலினி ஆகியோருடன் ரசிகர் ஒருவர் புகைப்படம் எடுத்துக்கொண்டது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு சின்ன தல நல்லா வளர்ந்துட்டாரு என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.