இந்தியளவில் பல இளைஞர்களின் மனதில் கனவு கன்னியாக இருந்து வந்தவர் ஐஸ்வர்யா ராய். இவர் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளனர்.
அபிஷேக் பச்சனுடன் திருமணம் ஆவதற்கு முன் ஐஸ்வர்யா ராய் சில நடிகர்களை காதலித்துள்ளார். இதில் சல்மான் காணும் ஒருவர் என்பதை அனைவரும் அறிந்தது.
சல்மான் கானுடன் ஏற்பட்ட காதல் முறிவுக்கு பின் பிரபல நடிகர் விவேக் ஓப்ராய் என்பவரை ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்துள்ளார்.
இருவரும் டேட்டிங் செய்து வந்த நேரத்தில் ஐஸ்வர்யா ராய்யின் முன்னாள் காதலர் சல்மான் கான் நடிகர் விவேக் ஓப்ராய்யை கூப்பிட்டு ஐஸ்வர்யா ராய்யை காதலிக்க கூடாது மிரட்டியுள்ளாராம். அந்த சமயத்தில் இந்த செய்தி படுவைரலானது என்றும் கூறுகிறார்கள்.
விவேக் ஓப்ராய் – ஐஸ்வர்யா ராய் காதலித்து வந்த நிலையில், திடீரென இருவரும் காதலை முறித்துக்கொண்டு பிரிந்துவிட்டார்களாம்.
இதன்பின் ரித்திக் ரோஷனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஐஸ்வர்யா ராய், அந்த அணைத்து கிசுகிசுவையும் தாண்டி நடிகர் அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.