தற்போது பொங்கலுக்கு வெளியாகி சக்கை போடு போட்டு கொண்டிருக்கும் தல அஜித் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கன் தனது முந்நூல் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள் துணிவிற்கு முன்னரே ஆர்யாவுடன் சார்பட்டா பரம்பரை அஜித்துடன் வீரம் திரைப்படத்தில் தமன்னாவை கொள்ள வரும் கூலிப்படை தலைவன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாகி மக்கள் மனதில் நல்ல வரவேற்பைபெற்றுள்ளது இந்த திரைப்படம் இதில் அல்ட்டிமேட் ஸ்டார் அஜித்குமார் மஞ்சு வாரியார் ஜான் கொக்கன் மகாநதி சங்கர் பிக்பாஸ்மூலம் புகழ்பெற்ற அமீர் மற்றும் பாவனி ஆகியோர் சமுத்திரக்கனி என பலரும் நடித்துள்ளார்கள் அதிக முக்கிய வில்லனாக நடித்திருந்தார் ஜான் கொக்கன் இதனால் மக்கள் மத்தியில் இவர் தற்போது அதிக பிரபலம் அடைந்துள்ளார் இந்த நிலையில் தனது மனைவி பூஜா கரு தரித்துள்ளார் என்று முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அந்த மகிழ்ச்சியை கொண்டாட தற்போது தாய்லந்தில் தனது மனைவியுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டு தனது மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.துணிவு வாரிசு இரண்டு திரைப்படமும் இந்த பொங்கலுக்கு வெளியாகி வெற்றி ரேஸில் ஓடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் துணிவு வில்லனுக்கு வாரிசு உருவாகி இருப்பதால் விஜய் ரசிகர்களும் உங்கள் வாரிசு நலம் பெற வாழ்த்துகிறோம் என்று கூறி வருகிறார்கள்.
ஜான் கொக்கன் மனைவியான பூஜா கொக்கன் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் இருவருக்கும் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram