துளிகூட மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட புகைப்படம் !! கெழவி மாதிரி இருக்கீங்க !! கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் !!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ் இவர் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஜய் விஷால் சூர்யா தனுஷ் விக்ரம் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்து எளிதில் பிரபலமானவர்.

அது மட்டுமல்லாமல் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவர இருக்கும் ரஜினியின் 168 ஆவது திரைப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆனது மிகப் பிரபலமான இடமான ரமோஜி பிலிம் சிட்டியில் மிக விறுவிறுப்பாக படப்பிடிப்புகள் நடந்து கொண்டு வருகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் கீர்த்தி சுரேஷ் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து பார்ப்பதற்கே பரிதாபமாக தோற்றத்தில் புகைப்படம் வெளியிட்டார் என்பது ஞாபகம் இருக்கிறதா.

இன்னமும் அதே தோற்றத்தில் தான் மெயின்டெயின் செய்து வருகிறாராம். ஆனால் அது படக்குழுவினருக்கு சற்று ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. என்ன இருந்தாலும் கீர்த்தி சுரேஷிடம் அந்த பழைய கொலுக்மொழுக் தேகம்தான் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பதை தெளிவுபடுத்தி விட்டார்களாம்.

இதனால் தொடர்ந்து பல பட வாய்ப்புகளை இழந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். கீர்த்தி சுரேஷிடம் ரசிகர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அவரிடம் தெளிவு படுத்துகிறார்களா? இல்லையா? என்பது தெரியவில்லை.

மேலும் மேலும் உடற்பயிற்சி செய்து மீண்டும் மெலிந்த தோற்றத்திலேயே காணப்படுகிறார். இந்நிலையில் துளியும் மேக்கப் போடாமல் கீர்த்தி சுரேஷ் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால் பார்ப்பதற்கே கொஞ்சம் வயதான பெண் போல் ஆகி விட்டார். கீர்த்தி சுரேஷிடம் எப்படியாவது பழைய பன்னீர்செல்வமா மாறி வாங்க என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.