80, 90களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் தான் கவுதமி. கௌதமி இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி மற்றும் கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழித் திரைப்படங்களில் நடித்து உள்ளார். தொலைக்காட்சி தொகுப்பாளர், ஆடை வடிவமைப்பாளர், தொலைக்காட்சி நாடக நடிகை,
தொலைக்காட்சி நிகழ்ச்சி நடுவர் என பல்வேறு துறைகளில் வேலை செய்து உள்ளார்.இவர் சூப்பர் ஸ்டார் நடிப்பில் 1988 -ம் ஆண்டு வெளிவந்த குரு சிஷ்யன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழில் அறிமுகம் ஆனார். இவர் தமிழ் மொழியை தாண்டி கன்னடம்,
மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து உள்ளார். கவுதமி 1998 -ம் ஆண்டு சந்தீப் பாட்டியா என்பவரை கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் பிரிந்தனர். இவர்களுக்கு 23 வயதில் மகள் உள்ளார்.
தற்போது கவுதமி தனது மகளுடன் சேர்ந்து எடுத்து கொண்ட போட்டோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது. அந்த போட்டோவில் கவுதமியின் மகள் ஹீரோயின் போல இருக்கின்றார் என்று ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.