தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சினேகா.மாதவன் நடித்த என்னவளே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.இதற்கு முன்னரே மலையாளத்தில் நடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் படத்திலேயே முக்கிய கதாநாயகன் மட்டுமல்லாமல் அந்த குழுவே பிரம்மாண்டமாக அமைந்தது.இந்த காரணத்தால் இவரது பெயரும் அதிகமாக பேசப்பட்ட நிலையில் முக்கியமான கதாநாயகியாக மாறினார்.
பின்னர் நடிகர் பிரசன்னாவை திருமணம் முடித்துவிட்டு செட்டிலானார்.இதோடு சினிமா பக்கம் வரமாட்டார் என்று நாம் நினைத்த நிலையில் மீண்டும் சில குணச்சித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார்.
இவர் நடித்த முதல் படமான என்னவளே திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்ரன்தானாம்.சிம்ரன் அப்போது முன்னணி நடிகையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்னேஹா அப்போதுதான் அறிமுகம் ஆகிறார் என்பதால் இவரை கதாநாயகியாக போடுவதில் மாதவனுக்கு துளியும் இஷ்டம் இல்லையாம்.பின்னர் படக்குழுவின் வற்புறுத்தலின் பேரில்தான் மாதவன் ஒப்புக்கொண்டாராம்.
அந்த படம் பின்னர் நல்ல வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.என்னதான் இருந்தாலும் புன்னகை அரிசியையே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் என இன்றும் இந்த விஷயத்தை ரசிகர்கள் கிசுகிசுத்துவருகிறார்கள்.