தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வருபவர் நடிகை நயன் தாரா. தமிழில் சரத்குமார், ரஜினிகாந்த் போன்றவர்களின் படங்களில் நடித்து அறிமுகமாகிய நடிகை நயன் தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளின் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து ஹிட் கொடுத்து வந்தார்.
தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பின் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தையை பெற்று கிடைக்கும் நேரத்தில் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்.
சினிமாவை பொறுத்தவரையில் நடிகைகளுக்கு வாய்ப்பு கிடைக்க அட்ஜெஸ்ட்மெண்ட் செய்யும் நிலை ஏற்படும். அந்த சம்பவம் தனக்கும் நடந்துள்ளதாக நடிகை நயன் தாரா உண்மையை கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் என் படத்தில் முக்கிய ரோல் தருகிறேன், அதற்கு நீ அட்ஜெஸ்ட் பண்ண வேண்டும் என்று இயக்குனர் ஒருவர் கூறியுள்ளார். ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க அப்படி ஒருவர் கேட்டதற்கு என் திறமை மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது முடியாது என தைரியமாக கூறினேன் என்று சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் நயன் தாரா கூறியுள்ளார்.
முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நயன் தாரா இந்த சம்பவத்தை பல ஆண்டுகள் கழித்து கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. யார் அந்த நபர் என்று கூறினால் இளம் நடிகைகளுக்கு உதவியாக இருக்குமே அதை சொல்லுங்கள் என்று சினிமா ஆர்வலர்கள் கூறி வருகிறார்கள்.