பிக் பாஸ் நிகழ்ச்சியானது மக்களுக்கு மிகவும் பிடித்த ஒரு நிகழ்ச்சியாக மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.குறிப்பாக மற்ற நிகழ்ச்சிகளை விட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் மிகவும் பெரிய வரவேற்பு உள்ளது.
முந்தைய சீசன்கள் அளவிற்கு இல்லாவிட்டாலும் இந்த சீசன் சற்றே மக்களின் பொழுதை போக்கும் வகையில் சென்றுகொண்டிருக்கிறது.
இந்த சீசனில் இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா, சம்யுக்தா, சனம் ஆகிய 6 பேர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டிருந்தனர்.
மேலும் கடந்த வாரம் டபுள் எவிக்சனில் ஜித்தன் ரமேஷ் மற்றும் நிஷா ஆகியோர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினர். இதில் சனம் ஷெட்டியின் வெளியேற்றம் ரசிகர்களுக்கு பெரும் சோ க த் தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, இந்த வார நாமினேஷனில் ஆரி, ரியோ, அர்ச்சனா, சோம், ஆஜித், அனிதா, ஷிவானி இடம்பெற்றுள்ளனர். இவர்களில் போன வாரம் போல் இந்த வாரமும் டபுள் எவிக்ஷன் இருக்குமா? என ரசிகர்கள் கு ழ ம் பிய நிலையில், யார் வெளியேறுவார்கள் என எ திர்பாத்துகொண்டிருக்கின்றனர்.
அதில், எப்பொழுதும் போலவே ஆரி, ரியோ அதிக வாக்குகள் பெற்று முன்னிலை பெற அடுத்தடுத்த இடத்தில், ஷிவானி, அனிதா, சோம் இடம்பெற்றனர்.
ஆனால், ஆஜித் மற்றும் அர்ச்சனாவே குறைவான வா க் குகளில் இடம்பெற்று வருகின்றனர். ஒரு வேளை இந்த வாரமும் டபுள் எ விக்ஷன் இருந்தால், ஆஜித், அர்ச்சனா வெளியேற அ திக வாய்ப்பிருப்பதாகவும், அப்படி இல்லை என்றால் அர்ச்சனா வெ ளியேற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிகிறது.