“நீயே வாழ்க்கை என்பேன்,இனி வாழும் நாட்கள் எல்லாம்” என உங்கள் கணவர் உணர்த்தும் 6 அறிகுறிகள் !!

Uncategorized

கணவன் மனைவி உறவு என்பது கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்ட பந்தம். மனம், உடல் என்று இரண்டற கலந்து வாழ்கை பயணத்தில் ஒரு மனதாய் செயல்படும் அற்புதமான உறவு. ஒருவருக்கு ஒருவர் துணையாய் மரணம் வரை ஒன்றாய் பயணிக்கும் பந்தம். அம்மா என இருந்த பெண் கணவர் வந்ததும் அம்மா வீட்டில் செலவிடும் நேரம் குறையும், மனைவி தாய் வீட்டிற்கு சென்றால், எப்போது வருவாய் என பல முறை மனைவியின் அலைபேசி ஒலிக்கும். சிறிது கால பிரிவை தாங்க முடியாமல் தவிப்பார்கள். அன்றில் பறவையை போல், நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என கணவர் உணர்த்தும் 6 அறிகுறிகளை இங்கு பார்க்கலாம்.

உங்கள் கணவர் அலுவலகம் சென்ற பின் உங்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது. முக்கியமான விஷயங்களை விடுத்து, சாதாரண உரையாடலாக பேசுவது. உங்கள் கணவர் வெளியூர் சென்று இருக்கும் போது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொலைபேசியில் தொடர்பு கொள்வது. குறிப்பாக நீங்கள் கழிவறையில் இருக்கும் போது, உங்கள் தோழிகளுடன் நேரம் செலவிடும் போதும் அலைபேசி ஒலிக்கும். அவர் உங்களை மிஸ் செய்கிறார் என்பதை உங்களிடம் சொல்லவே அந்த அழைப்பு. அதிக வார்தைகள் தேவையில்லை, ஆனால் ஒரு சில வார்த்தைகளே போதுமானது.

உங்கள் எதிர்காலம் பற்றிய கனவு. வீடு, கார் போன்றவற்றை வாங்குவது, அதில் உங்களுடனான வாழ்கை போன்றவற்றை பற்றிய கற்பனை. உங்களது முதுமை பருவ வாழ்க்கையை பற்றிய கனவு என உங்களுடனான எதிர்கால வாழ்வை பற்றி கனவு காண்பது. குழந்தை பிறப்பு மற்றும் வளர்ச்சி என உங்களோடு கற்பனை செய்து பார்த்தால், அவர் உங்களை நீங்கி வாழ்வது கடினமான ஒன்றாக இருக்கும்.

காலை எழுந்தது முதல் இரவு படுக்க செல்லும் வரை அது எங்கே, இது எங்கே என கேட்பது. உதாரணமாக, என் வண்டி சாவி எங்கே? என் பை எங்கே? இது போல் கேள்விகளை கேட்பார். இவை நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என உணர்த்தும் குறிப்பாகும். அவரது காலுறையில் ஒன்றை காணவில்லை என சத்தமிடவும், நீங்கள் அதை கண்டுபிடித்து கொடுத்த உடன் நன்றி சொல்வது போன்றவை, நீ இல்லாமல் என்னால் ஏதும் செய்ய முடியாது என உணர்த்துவதாகும்.

உங்கள் கணவருக்கு அதிகமான வேலைப்பளுவின் காரணமாக, உங்களுடன் வாரம் முழுவதும் நேரம் செலவிட முடியாமல் போயிருக்கலாம். அவர் அதிக வேலைப்பளுவிலும் உங்களுக்காக நேரம் செலவிட திட்டமிட்டு செயல் படுத்துவார். இது அவர் உங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை எடுத்து காட்டி, உங்கள் உறவை பலப்படுத்தும்.

அவர் உங்களுடன் படுக்கையை பகிர்ந்து உறங்குவதையே விரும்புவார். நீங்கள் இல்லாமல் படுக்கையில் படுப்பது முழுமை அடையவில்லை என்பதை போல் உணர்வார். உங்களது அணைப்பின் வெதுவெதுப்பும், உங்கள் புன்னைகையும் தூங்கும் முன் காண விரும்புவார். இதனாலே உங்கள் கணவர் படுக்கை சென்றதும், நீங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்தால் குறுக்கிடுவது.

கணவரை விட்டு உங்கள் தோழி அல்லது உறவினருடன் வெளியிடங்களுக்கு நீங்கள் சென்றால், நீங்கள் எப்போது வருவீர்கள். ஏன் இன்னம் வரவில்லை என உங்களை நினைத்து கவலைப்படுவார். நீங்கள் எங்கு இருந்தாலும், உங்களை பற்றிய சிந்தனை இருந்து கொண்டே இருக்கும். இவை எல்லாம் நீ இல்லமால் என்னால் வாழ முடியாது என கணவர் உணர்த்தும் அறிகுறியாகும்.