பசங்க பட சிறுவன் ஹீரோவாகிறார் !! எப்படி இருந்த பையன் எப்படி ஆகிட்டான்னு பாருங்க !! புகைப்படங்கள் உள்ளே !!

Uncategorized

படத்தில் குழந்தை நட்சத்திரமாக பல சிறுவர்கள் நடித்திருந்தனர்.இந்த இரண்டு திரைப்படமும் குழந்தைகளுக்கானது என்பதால் படத்தில் சிறுவர்களுக்கு பஞ்சமே கிடையாது.இதில் ஸ்ரீராம் கிஷோர் உட்பட பல்வேறு குழந்தை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பசங்க படத்தில் ஹீரோவின் தம்பியாக நடித்திருந்தவர் கிஷோர். அந்த படத்திற்கு பிறகு இவர் பெரிய அளவில் எந்த படத்திலும் தலைகாட்டவில்லை.விஜய் மில்டன் இயக்கத்தில் கோலிசோடா திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கவுள்ள புதிய படத்தில் அவர் ஹீரோவாக அறிமுகமாகிறார். இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் அவரின் லுக் பற்றி ஒரு புகைப்படமும் வெளிவந்துள்ளது.அதை படத்தின் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணனே தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.மேலும் இந்த திரைப்படத்தில் இவர் சிக்ஸ் பேக் வைத்து நடிக்க போவதாகவும் ஒரு சிறிய தகவல் வெளியாகி உள்ளது.மேலும் இதே படத்தில் பிரபல நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.புகைப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.