பிக்பாஸின் கம்பீர குரலுக்கு சொந்தக்காரர் யார் தெரியுமா ?? முதல்முறையாக வெளிவந்த வீடியோ இதோ !! அட இவர்தானா ??

பிக்பாஸ்

தமிழில் கடந்த நான்கு ஆண்டுகளாக பிக் பாஸ் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து சீசன்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

பிக்பாஸில் இருந்து இதுவரை யாருக்கும் தெரியாத ரகசியாக இருந்த விஷயம், பிக்பாஸின் குரல் தான். ஆம் பிக்பாஸிற்கு குரல் கொடுப்பவர் யார் என்ற கேள்வி அனைவருக்கும் உண்டு.

சில ஆண்டுகளுக்கு முன் பிக்பாஸ் துவங்கிய போது, தமிழ் பிக்பாஸிற்கு குரல் கொடுப்பவர் சீரியல் நடிகர் அமித் என்று தகவல்கள் வெளியானது.

ஆனால் இதனை மறுத்த அமித், தான் கன்னடத்தில் மட்டும் ஒருமுறை பிக்பாஸிற்கு குரல் கொடுத்துள்ளேன் என்றும் தமிழில் இதுவரை குரல் கொடுக்கவில்லை என்றம் கூறினார்.

இந்நிலையில் தற்போது பிக்பாஸாக குரல் கொடுப்பது யார் என்று முதல் முறையாக தெரியவந்துள்ளது. இவரின் பெயர் சச்சிதானந்தம்.

இவர் பாலிவுட் நடிகராக வலம்வருவது மட்டுமின்றி, குரல் வல்லுனராகவும் இருக்கிறாராம். இவரது புகைப்படங்கள் தற்போது தீயாய் பரவி வருகின்றது.