பிக்பாஸ் ஆரியின் பிறந்த நாளுக்கு சனம் கொடுத்த சர்ப்ரைஸ் !! என்ன செய்திருக்கிறார் தெரியுமா? இன்ப வெ ள் ள த்தில் ரசிகர்கள் !!

பிக்பாஸ்

பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரியின் பிறந்தநாள் Common டிபியை சனம் ஷெட்டி வெளியிட்டுள்ளார்.பிக் பாஸ் வீட்டில் ஆரிக்கு எதிராக பல போட்டியாளர்கள் செயல்பட்டு வந்த நிலையில், அவருக்கு ஆறுதலாக இருந்தது அனிதா சம்பத்தும், சனம் ஷெட்டியும் தான்.

ஆரி டைட்டில் ஜெயிக்க வேண்டும் என ரீ என்ட்ரியின் போது உள்ளே வந்த சனம் ஷெட்டி சொன்னது ஆரியின் ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.இந்நிலையில் நடிகர் ஆரி தனது பிறந்த நாளை பிப்ரவரி 12-ம் தேதி அன்று கொண்டாடுகிறார்.

இதனையடுத்து அவரது பிறந்தநாளுக்கான அழகிய Common DP-யை அவரது நண்பரான நடிகை சனம் ஷெட்டி தற்போது வெளியிட்டுள்ளார்.அவர் கூறும் பொழுது “சகோதரர் ஆரியின் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது பிறந்த நாளுக்கான Common DP-யை வெளியிடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.

 

அதுவும் இன்று இரண்டு கொண்டாட்டம் வேற இருக்கிறது. காரணம் இன்று அவரது மகள் ரியாவின் பிறந்த நாளும் கூட” என்று கூறியுள்ளார். இதனை தற்போது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.