பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறும் முன் அனிதாவின் முகத்திரையை கிழி கி ழினு கி ழி த்து தொ ங்க விட்ட கமல்! தீயாய் பரவும் காட்சி!!

பிக்பாஸ்

பிக்பாஸ் வீட்டில் நடந்த கடலை பருப்பு விவகாரத்தை கையில் எடுத்த கமல் அனிதாவை வேற லெவலில் வச்சு செய்தார்.

பிக்பாஸ் வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சாம்பார் செய்வதற்காக துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பை ஊற வைத்தார் அனிதா.

ஆனால் மூன்று நாட்கள் வரை அதை பயன்படுத்தாமல் நாற்றம் வரும் வரை கிட்சனிலேயே வைத்திருந்தார். சோம் நான்கைந்து முறை கூறியும் கூட அதை காதில் வாங்கவில்லை அனிதா..

இதுதொடர்பாக ஆரி தெரியப்படுத்தியதை தொடர்ந்து வீட்டின் கேப்டனான பாலாஜி அதுகுறித்து விசாரித்தார். இதனால் பிக்பாஸ் வீட்டில் பெரும் பி ர ளயம் வெ டி த்தது. இப்படிதான் நடக்கும் அது ஒன்றும் பெரிய பி ரச் சனை இல்லை என்று பாலாஜியுடன் வாக்குவாதம் செய்தார் அனிதா.

இன்றைய எபிசோடில் பேசிய கமல், அவ்வையார் மாதிரி பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும். என்று கூறிவிட்டு வாயில் கையை வைத்து ஏதோ தவறாக சொல்லியது போல் மூடினார்.

தொடர்ந்து தப்பா சொல்லிட்டேனோ.. இந்த பருப்பு மேட்டரை கொண்டு வந்திருக்க கூடாது என்று இழுத்தார். அப்போது பேசும் பாலாஜி, ஆரி புரோ என்கிட்ட ஒரு விஷயம் கேட்டாரு.. பருப்பு நீ கொட்டினீயான்னு கேட்டாரு என்று ஆரிதான் சொன்னார் என்பதை அழுத்தமாக கூறினார்.

அப்போது குறுக்கிட்ட கமல் நாங்கள் எல்லாத்தையும் பார்த்து விட்டோம்.. புரியாம கேட்கல, அதனால் பொழிப்புரை வேண்டாம் என்றார். அதற்கு பதில் சொல்லும் பாலாஜி, தவறு வந்து அவங்க இட் ஹேப்பன்ஸ் என்று அசால்ட்டாய் சொன்னது எனக்கு பிடிக்கல என்றார்.

அதற்கு பதில் சொன்ன அனிதா அந்த பருப்பை வைத்து வடை, செய்யலாம், கூட்டு செய்யலாம் என்று பிளான் பண்ணியிருந்தேன் என்று கூறினார். அதை கேட்ட கமல் உங்களுக்கு அதெல்லாம் செய்ய தெரியுமா என்றார். மேலும் எனக்கு வராது உங்களுக்கு தெரியுமா என்றும் கேட்ட கமல், எனக்கு சாப்பிடதான் தெரியும் செய்ய தெரியாது என்றார்.

தொடர்ந்து பேசிய அனிதா, அவர் அதுகுறித்தே தொடர்ந்து பேசியது எனக்கு ரொம்ப பிரஷரா இருந்துச்சு. அவரோட அப்ரோச் ரொம்ப ரூடா இருந்துச்சு. அதனால எனக்கு கொஞ்சம் ஈகோ வந்துடுச்சு சாரி கேட்கவில்லை என்று தனது தவறுகளை கமலிடம் நியாயப்படுத்தினார் அனிதா.

இதனை பார்த்த கமல் அவர் பாணியில் கிழித்து தொங்க விட்டார். இதனை பார்த்த ரசிகர்கள் பிக் பாஸில் இருந்து வெளியேறும் முன் கமலிடம் வசமாக சிக்கியுள்ளதாக கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.