நடிகை ஷிவானி நாராயணன் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் துறையில் பணிபுரியும் தென்னிந்திய நடிகை ஆவார். மேலும் இவர் 5 மே 2001 அன்று தமிழ்நாட்டின் சாத்தூரில் பிறந்தார் மேலும் சென்னையில் வளர்ந்தார்.
சென்னையில் பள்ளி படிப்பை முடித்த இவர், விஜய் டிவியில் முகமது அஸீமுடன் இணைந்து பகல் நிலவு என்ற தமிழ் தொலைக்காட்சி தொடரில் அறிமுகமானார். ஆர்ஜே ரியோவுடன் பிரவீன் பென்னட் இயக்கிய பிரபல சீரியலான சரவணன் மீனாட்சி சீசன் 3-ல் இவர் தோன்றினார்.
இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கடைக்குட்டி சிங்கம் என்ற தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தனிப்பட்ட காரணத்தால் சீரியலில் இருந்து விலகிய இவர் அவருக்கு பதிலாக நடிகை “ஐரா அகர்வால்” நியமிக்கப்பட்டுள்ளார்.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய “விக்ரம் (2022)” என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் தனது திரையுலகில் அறிமுகமானார். அடுத்து அவர் RJ பாலாஜியின் “வீட்ல விசேஷம்” திரைப்படம் மற்றும் வடிவேலுவின் திரைப்படமான “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்” ஆகியவற்றில் துணை வேடங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
மேலும் இவர் VJS46 திரைப்படத்தின் மூலம் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாக உள்ளார், பின்னர் அது DSP என பெயரிடப்பட்டு வெளியானது . எப்போதுமே இன்ஸ்டாகிராமில் க.வர்ச்.சியாக போட்டோவை பதிவேற்றும் ஷிவானி, சமீபத்தில் சேலையில் கல்யாண பெண் போல அழகாக போஸ் கொடுத்துள்ளார்.
அந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள், கமெண்டில் கல்யாணம் ஆகிவிட்டதா..??, எப்போ கல்யாணம்..?? என கேள்விகளை வரிசையாக கேட்டு வருகின்றனர்.