பிக் பாஸ் ஒரு கண்ணோட்டம்

0
310

2006 ல அப்பவே பிக் பாஸ் தொடங்கிட்டாங்க, இந்திய அளவில் ஹிந்தி மொழியில் தான் முதலில் தொடங்கினார்கள் பிறகு இப்பொழுது தமிழுடன் சேர்த்து மொத்தம் 7 மொழிகளில் ஒளிபரப்பப்படுகிறது. தமிழ், கன்னடம்,பெங்காளி,தெலுங்கு,மராத்தி, மலையாளம், போன்ற மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக உள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரபலங்கள் மட்டுமல்ல சில பொதுமக்களும் கலந்து கொள்ள முடியும் இவர்களை தேர்வு வைத்தே முடிவு செய்கின்றனர்.இந்த ஷோவில் பங்கேற்பவரை housemates என்று அழைக்கின்றனர்.

synopsis – கதைச்சுருக்கம் போட்டியில் பங்கேற்பவர்கள் தனியே ஒரு வீடு கொடுக்கப்படுகிறது அந்த வீடும் நம் உலகத்தை விட்டு தனி உலகம் போல் அவர்களுக்கு தோன்றும் அளவிற்கு உள்ளது. அவர்களுக்கு தேவையான அணைத்து தேவைகளும் உள்ளே அமைக்கப்படுகிறது. அவர்களை சுற்றிலும் காமெராக்கள் உள்ளது. மேலும் அவர்களின் மேல் ஆடியோ மைக்ரோ போன் உள்ளது என்ன செய்தாலும் பேசினாலும் அனைவருக்கும் தெரிய வரும். ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது 100 நாட்கள் 15 பிரபலங்கள் ஒவ்வொரு வாரமும் மக்கள் அவர்களின் வாக்கினை SMS வாயிலாக ஆன்லைன் மூலம் தெரிவித்து ஒவ்வொருவராக வெளியேற்றுவர் கடைசி வரை இருப்பவரே வெற்றியாளர் அவருக்கு பரிசு வழங்கப்படும்.

histroy – வரலாறு இந்திய மக்களால் பெரிதும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு நிகழ்ச்சி இந்த பிக் பாஸ். ஹிந்தி – 12 சீசன் , கன்னட -6 சீசன், பெங்காளி – 2 சீசன், தமிழ் – 2 சீசன் , தெலுங்கு – 2 சீசன்,மராத்தி மற்றும் மலையாளத்தில் ஒரு சீசனும் முடிந்துள்ளது. இந்த வருடம் மீண்டும் வெற்றிகரமாக தொடங்க உள்ளது.

சீசன் 1 வெற்றியாளர் – ஆரவ் – 50 லட்சம்

சீசன் 2 வெற்றியாளர் – ரித்விகா –
50 லட்சம்

சீசன் 3 வெற்றியாளர் – ????

பங்கேற்பாளர்கள் இந்த சீசனில் நடிகை ஆல்யா மான்ஷா,நடிகை சாக்சி, எம்.எஸ்.பாஸ்கர் கலந்து கொள்ள இருபதாக தகவல் வெளியாகி உள்ளது.பொருத்திருந்து பார்ப்போம்

மேலும் உங்கள் எண்ணங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்பினால் கமெண்ட் செய்யவும் நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here