பிக்பாஸ் 6 நிகழ்ச்சி ஜனவரி மாதம் முடிவுக்கு வந்துவிட்டது. இதில் அசீம் வெற்றியாளராக தேர்வு ஆனது தான் மக்களுக்கு கொஞ்சம் சோகத்தை கொடுத்துள்ளது.
ஏனென்றால் அவரை விட சிறப்பாக விளையாடிய பல போட்டியாளர்கள் அவருக்கு முன்னமே வெளியேறிவிட்டதால் இவர் ஜெயித்தார் என மக்கள் கருத்து கூறி வந்தார்கள்.
ஷிவினை கூட வெற்றியாளராக அறிவித்திருக்கலாம் என்பது மக்களின் ஒரு எண்ணம்.ஏனென்றால் மக்களுக்கு அவரை மிகவும் பிடித்திருந்தது என்பதுதான் உண்மை.
பிக்பாஸ் பிறகு ஷிவினுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது, அதாவது அவர் விஜய் டிவியில் முடிவுக்கு வரப்போகும் பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய லேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அந்த படப்பிடிப்பு தள புகைப்படம் வெளியாக அட வேறு சீரியலில் வந்திருக்கலாமே என கமெண்ட் செய்கின்றனர்.உண்மை தகவல் என்பதை விரைவில் எதிர்பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.