பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி முடிந்து அதில் வெற்றியாளராக அசிம் வெற்றிக்கோப்பையையும் பரிசு பணத்தையும் பெற்று சென்றுள்ளார் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த நிகழ்ச்சி 106 வைத்து நாளில் மூன்று பேர் மட்டுமே வீட்டின் உள்ளே இருந்தார்கள் அதில் விக்ரமன் அசிம் ஷிவின் ஆகிய மூன்று பெரும் வெற்றி மேடையை நிக்கி வந்தார்கள் இறுதியில் அசிம் முதலிடத்தையும் விக்ரமன் இரண்டாம் இடைத்தையும் ஷிவின் மூன்றாம் இடத்தையும் பெற்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து போட்டியாளர்களுக்கும் சில பதக்கங்கள் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதுவரை இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து ஆறாவது சீசனில் வந்தடைந்த நிலையில் எப்போதும் இல்லாத பல வித்தியாசமான நிகழ்வுகள் இந்த சீசனில் தான் நடந்தது எப்போது இரண்டு நபர் மட்டுமே வரும் இறுதி மேடையில் இந்த முறை மூன்று பேர் வந்து நின்றார்கள்.
மூவரில் யார் வெற்றியாளர் என்று கூற தாமதித்து உலகநாயகன் பார்வையாளர்களின் நாடி துடிப்பை எகிற செய்து கொண்டே இருந்தார் இறுதியில் அசிம் தான் வெற்றியாளர் என்று அறிவிக்கப்பட்டது அவருக்கு பிக்பாஸ் ட்ராஃபி 50 லட்சம் அதுமட்டுமின்றி பபுதிய கார் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி நாளில் வெற்றி மேடைக்கு வந்த அசிம் விக்ரமன் ஷிவின் ஆகிய மூன்று பேருக்கும் தனது கைப்பட ஒரு கடிதத்தை எழுதி அதை பிரேம் போட்டு பரிசளித்து அனைவரையும் மிரண்டு போக வைத்திருந்தார்.