பெண்களிடமிருந்து விடிவு காலம் வேண்டும் !! – ஆண்கள் சங்கத்தினர் நடத்திய வினோத போராட்டம் – வீடியோ இணைப்பு !!

செய்திகள்

உலக மகளிர் தினத்துக்கு எதிராக ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.உலகம் முழுவதும் நேற்று மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.சாதனை பெண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சேப்பாக்கத்தில் தமிழ்நாடு ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பெண்களிடம் இருந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அருகே ஆண்கள் பாதுகாப்பு சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு ஆண்கள் பாதுகாப்பு சங்க தலைவர் அருள்துமிலின் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மதுசூதனன், வெற்றிவேல், ஆல்பர்ட், அப்துல்லத்தீப் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது, ஆண்களுக்கு எதிரான சட்ட மீறல்களைத் தடுக்க வேண்டும். ஆண்டுக்கு 10,000 திருமணமான ஆண்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். திருமணமான ஆண்கள் தற்கொலைக்கு காரணமாக இருக்கும் மனைவிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.

ஆண்கள் வரதட்சணை கொடுமை என்ற பெயரில் கணவரையும், அவரது குடும்பத்தினரையும் துன்புறுத்துவதைத் தடுத்து அவர்களைப் பாதுகாக்க வேண்டும். தேசிய ஆண்கள் ஆணையம் அமைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.மேலும், சட்டத்தின் துணையோடு ஆண்களை அடிமைப்படுத்தாதே. ஆண்களுக்கு ஜீவனாம்ச சட்டத்தை அமல்படுத்து போன்ற வாசகங்களை முழங்கினர்.

வீடியோ இணைப்பு ;

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.