பெண்களின் ஹீரோ ஆர்யாவின் சொத்துமதிப்பு எவ்வளவு தெரியுமா? – இவருக்கு இவ்வளவு சொத்தா?

சினிமா

தமிழ்சினிமாவில் இளம்பெண்களின் மனதை அதிகம் கொள்ளை கொண்டவர் தான் நடிகர் அர்யா. அனைத்து ஹீரோயின்களுடனும் கிசுகிசு வந்தாலும் அதனை காதில் போட்டுக்கொள்ளாதவர்.

இவர் தற்போது எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியில் தன்னை திருமணம் செய்யவிருக்கும் பொருத்தமான பெண்களுக்கு போட்டி வைத்து அதில் வெற்றி பெறுபவரை திருமணம் செய்யவுள்ளார்.

இவ்வாறு அனைத்து பெண்களையும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் ஆர்யாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?. சென்னையில் சொந்தமாக ஷீ ஷெல் என்ற உணவகம் வைத்துள்ளார். இந்த ஹொட்டலின் பல கிளைகளும் உள்ளது.

ஆர்யா வைத்திருக்கும் 3 கார்களின் விலை 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் ஆர்யா வைத்திருக்கும் புரோடக்ஷன் கம்பெனியில் இதுவரை எட்டு படங்கள் தயாரித்துள்ளார்.

ஆர்யாவின் சொந்த ஊர் கேரளா ஆகும். இங்கும், சென்னையிலும் என இரண்டு வீடுகள் உள்ளது. அதுமட்டுமின்றி பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் அவர் நடிக்கும் ஒரு படத்திற்கு 4 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நடிக்கும் எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியின் மூலம் லட்சக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். ஆக மொத்தம் ஆர்யாவின் சொத்து மதிப்பு 90லிருந்து 95 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.