பெண்ணாக மாறிய பிரபல நடிகர் ! – யாரென்று தெரிகிறதா? : புகைப்படம் உள்ளே

சினிமா

உலக சினிமாவிலிருந்து உள்ளூர் சினிமாவரை பெண் வேடம் இட்டு நடிகர்கள் நடிக்கிறார்கள் என்றால் அந்த படத்திற்கு மிகபெரிய வரவேற்ப்பு கிடைக்கும். அது போல இந்திய சினிமாவில் பல முன்னணி நடிகர்கள் பெண் வேடத்தில் நடித்து அந்த படங்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது.

ஏன் தமிழ் சினிமாவில் கூட ஆரம்ப காலம் முதல் இப்பொழுது வரை  பெண் வேடத்தில் நடித்து விருதுகளை அள்ளி உள்ளனர். இவற்றில் பலருக்கும் எடுத்துக்காட்டாக இருபது நடிகர் கமல் நடித்த ஔவை ஷண்முகி படம். பெண் வேடம் என்றால் இந்த படம் தான் இன்றும் நம் நினைவிற்கு வரும்.

இறுதியாக பெண் வேடத்தில் தமிழில் முன்னணி நடிகர் சிவ கார்த்திகேயன் நடித்த ரெமோ  படம் பெரும் வெற்றியை பெற்றது. ஆனால் மலையாள திரை உலகில் பெரிய நடிகர்கள் யாரும் பெண் வேடம் அணிந்து நடித்ததில்லை. மலையாள பல படங்களில் ஹீரோவாக நடுத்தவர் நடிகர் ஜயசூர்யா .இவர் 2001 இல் தமிழில் வெளியான என் மன வானில் என்ற படத்தில் வாய் பேச முடியாத ஹீரோவாக நடித்திருந்த இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கிவருகிறார்.

இவர் நடித்த அமர் அக்பர் அந்தோணி,பிரேதம் போன்ற படங்கள் மிக பெரிய ஹிட் ஆனது. மலையாள படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் அந்த படங்கள் எடுக்க பட்ட விதமும் காட்ட பட்ட காட்சிகளும் அப்படியே உண்மையான காட்சி போலவே இருக்கும் .

அது மட்டுமல்லாமல் நல்ல கதையம்சமும், கேரள அழகாய் காட்டும் காட்சி நகர்வுகளும் நமக்கு பிடித்த விதமாகவே அமையும். அப்படிப்பட்ட படமான மலையாள இயக்குனர் ரஞ்சித் இயக்கிவரும் ஞான் மெரிக்குட்டி என்ற படத்தில் நடிகர் ஜயசூர்யா பெண் வேடமிட்டு நடிக்கவுள்ளார் என்று நமது வளைத்தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் செய்தி வெளியொட்டிருந்தோம்.

தற்போது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்க கூடிய செய்தி என்னவென்றால் நடிகர் ஜயசூர்யா நிஜமாகவே பெண் வேடத்தில் நடித்தோருக்கிறார் என்று தற்போது வெளியாகியுள்ள அந்த படத்தின் டீசெரில் காணலாம். இவரின்   புதிய முயற்சிக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மலையாளம் மட்டுமல்லாது அனைத்து சினிமா ரசிகர்களிடையில் இது வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இதோ அந்த படத்தின் டீசர்:

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.