பேருந்தில் இளைஞனை நம்பி அமர்ந்த பெண்ணுக்கு நேர்ந்த கதி! – என்ன செய்திருக்கான் பாருங்க! பெண்களே இப்படியும் நடக்கிறது கவனம்!

Uncategorized

பேருந்தில் பயணித்த பெண்ணொருவரை கைபேசியில் காணொளிப் பதிவு செய்த இளைஞர் ஒருவர் பொதுமக்களால் நையப் புடைக்கப்பட்ட சம்பவம் ஒன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.புறக்கோட்டையிலிருந்து கதுருவெல நோக்கிப் பயணித்த பேருந்திலேயே அலவ்வ என்ற இடத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது, புறக்கோட்டையிலிருந்து கணிசமான பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பயணிகள் பேருந்து நேற்றுக் காலை சென்றுள்ளது.அலுவலகத்திற்குச் செல்வதற்காக இளம் பெண் ஒருவர் குறித்த பேருந்தில் ஏறிச் சென்றுள்ளார். பேருந்தில் சன நெரிசல் அதிகமாக இருந்ததனால் குறித்த பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் தனது ஆசனத்தைக் கொடுத்துவிட்டு எழும்பி இருந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த இளைஞரை நன்றியுடன் பார்த்துச் சிரித்துவிட்டு குறித்த பெண் அந்த ஆசனத்தில் அமர்ந்துள்ளார். இவ்வாறு சென்றுகொண்டிருக்கும்போது இடம்விட்டுக் கொடுத்த குறித்த இளைஞர் தனது கைபேசியை எடுத்து மிகச் சூசகமாக அந்தப் பெண்ணை ஆபாசமான முறையில் காணொளிப் பதிவு செய்துகொண்டிருந்துள்ளார்.

இதனை அவதானித்த மற்றுமொரு பயணி அதுகுறித்து பேருந்து நடத்துனருக்கு சைகை மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.குறித்த நபருக்கு அருகில் வந்த பேருந்து நடத்துனர் அவரது கைபேசியை சடுதியாக பறித்துப் பார்த்தபோது காணொளிக் கமெரா இயக்கத்தில் இருந்தமை தெரியவந்தது.

இதனையடுத்து குறித்த கமெராவில் பதிவாகியிருந்த காணொளி அழிக்கப்பட்டதுடன் இளைஞரை குறித்த பெண் உள்ளிட்ட சிலர் தாக்கியுள்ளனர்.தென்னிலங்கையில் மட்டுமன்றி நாட்டின் பல பிரதேசங்களிலும் இதுபோன்ற குற்றச் செயல்கள் பரவலாக இடம்பெற்றுவருவதால் பெண்களை இதுகுறித்து அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.