பேஸ்புக் மூலம் 16 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம்!. விசாரணையில் காவல் துறைக்கு கிடைத்த பகீர் தகவல்கள்!

செய்திகள்

இளம் பெண்ணை கடத்தி திருமணம் செய்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் சீனிவாசலு. இவர் கட்டாரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு ஈரோட்டை சேர்ந்த தனசேகரன் என்பவரின் மனைவி ரேகாபானு  பேஸ்புக் மூலம் அறிமுகமானார். பின்னர் ரேகாபானு தனக்கு தெரிந்த ஒரு 16 வயது மைனர் பெண்ணை சீனிவாசலுவுடன் பேச வைத்ததோடு, பெண்ணை திருமணம் செய்து அழைத்து செல்லும்படி சீனிவாசலுவிடம் கூறியதாக தெரிகிறது.

இதற்காக கட்டாரிலிருந்து  ஈரோட்டுக்கு வந்த சீனிவாசலு அந்த இளம் பெண்ணை கடத்திக்கொண்டு வேலூரில் திருமணம் செய்தார். பின்னர் அவரை சித்தூருக்கு அழைத்து சென்று அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனை தொடர்ந்து  அந்த இளம் பெண்ணின் தாய் தனது மகளை காணவில்லை என்று காவல்துறையில் புகார் கொடுத்தார்.

புகாரின்பேரில்  பொலிசார் விசாரணை நடத்தியதில் சீனிவாசலு அந்த இளம் பெண்ணை கடத்திக்கொண்டு வேலூரில் திருமணம் செய்து வாழ்ந்துவந்த தகவல் தெரியவந்தது. பின்னர் சித்தூருக்கு சென்ற பொலிசார் அந்த இளம் பெண்ணை மீட்டதுடன், சீனிவாசலுவையும் கைது செய்து ஈரோட்டிற்கு கொண்டு வந்தனர்.

இந்த சம்பவத்திற்கு மூலகாரணமாகவும், உடந்தையாகவும் இருந்த ரேகாபானு கைது செய்யப்பட்டுள்ளார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.