போட்டிக்கு இடையே குழந்தைக்கு பாலூட்டிய வீராங்கனைக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் புகைப்படம்!!

வைரல் விடீயோஸ்

கைப் பந்து வீராங்கனை ஒருவர் போட்டியின் இடையே கைக்குழந்தைக்கு பால் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

இது குறித்து மேலும் தெரிய வருவதாவது,

மிசோரம் மாநிலம் துய்கும் மாவட்டத்தைச் சேர்ந்த கைப்பந்து வீராங்கனை லால்வென்ட்லுவாங்கி.

மிசோரத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் அவடைய ஏழு மாதக் குழந்தையையும் எடுத்துச் சென்றுள்ளார். போட்டி இடைவேளையில் சென்று லுவாங்கி அவரது ஏழு மாதக் குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார்.

இதனை அருகில் உள்ளவர்கள் புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படம் வைரலானதை தொடர்ந்து மிசோரம் மாநில அமைச்சர் ராபர்ட் ரோமாவியா ரோய்டி அவரின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அது மட்டும் இல்லை, அந்தப் பெண்ணுக்கு 10 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்து கைப்பந்து வீராங்கனையை மகிழ்ச்சியில் உறைய வைத்துள்ளார்.

இதேவேளை, குறித்த பெண்ணுக்கு சமூகவலைத்தளத்திலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.