மறைந்த பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்திதான் தன்யா. பலே வெள்ளையத்தேவா என்கிற திரைப்படம் மூலம் இவர் திரையுலகில் நடிக்க துவங்கினார்.
அதன்பின் பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, மாயோன் என சில திரைப்படங்களில் நடித்தார். இதில், கருப்பன் திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு சினிமாக்களிலும் தன்யா நடித்து வருகின்றார்.
ஆனால், இவர் எதிர்பார்த்தது போல் அதிக வாய்ப்புகள் வரவில்லை. எனவே, அழகான உடைகளில் கட்டழகை காட்டி போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்பக்கம் இழுத்து வருகின்றார்.
இப்படி செய்தால் தனக்கு சினிமா வாய்ப்புகள் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றார். அந்த வகையில், சேலையில் சைனிங் உடம்பை காட்டி அவர் வெளியிட்டுள்ள போட்டோக்கள் ரசிகர்களை கிறங்கடித்து உள்ளது.