மகாநதி படத்தில் கமலுக்கு மகளாக நடித்த பெண் யார் தெரியுமா?? அட இந்த நடிகை தானா அது !! புகைப்படங்கள் உள்ளே !!

சினிமா

1994 அம ஆண்டு உலகநாயகன் கமலஹாசன் இயக்கி நடித்த திரைப்படம் மகாநதி.இந்த படத்தில் கமலுக்கு மகளாக ஒரு சிறுமி நடித்திருப்பார்.அவரது பெயர் ஷோபா விக்னேஷ்.குழந்தை நட்சத்திரமாக இந்த ஒரு திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார்.தஞ்சாவூரில் பிறந்த இவர் சிறுவயது முதலே கர்நாடிக சங்கீதத்தை முறையாக கற்றுள்ளார்.

இவர் சிறுமியாக நடித்த மகாநதி படத்தில் உள்ள ஸ்ரீரங்கநாதனின் பாதம் என்ற பாடலையும் பாடியுள்ளார்.அதன்பின்னர் சரத்குமார் நடித்த அரவிந்தன் மற்றும் பிரஷாந்த் சிம்ரன் நடித்த கண்ணெதிரே தோன்றினாள் ஆகிய திரைப்படங்களிலும் பல பின்னணி பாடல்களை பாடியுள்ளார்.

அதன்பின்பு சினிமாவில் பாடுவதை நிறுத்திவிட்ட சோபனா விக்னேஷ் கர்னாடக சங்கீதத்தை மற்ற நாடுகளுக்கு பரப்பும் முயற்சியை மேற்கொண்டார்.இதில் அவருக்கு வெற்றியும் கிடைத்தது.அதன்மூலம் பல கர்னாடக சங்கீத ஆல்பங்களை வெளிநாடுகளில் வெளியிட்டார்.இதன்மூலம் இவருக்கு பல விருதுகள் கிடைத்தன.

1996ஆம் ஆண்டு எழில் இசை ராணி என்ற விருதினையும்,1997ஆம் ஆண்டு பண்ணிசை ராணி என்ற விருதினையும் ,2002ஆம் ஆண்டுக்கான இளம் சாதனையாளர் விருதினையும் பெற்றார்.

மேலும் 2003ஆம் ஆண்டு யுவ கால பாரதி என்ற பட்டதையும்,2014ஆம் ஆண்டுக்கான தமிழ் இசை பேரொளி விருதினையும் பெற்றார்.பின்னர் 2015ஆம் ஆண்டு இசை செல்வம் எனும் விருதினையும் பெற்றார்.

மேலும் சமூக அக்கறை கொண்ட இவர் பல இசை நிகழ்சிகளை நடத்தி அதிலிருந்து வரும் பணம் மூலம் பார்வையற்றோர் , உடல் ஊனமுற்றோர்,எய்ட்ஸ் நோயால் பாதிக்கபட்டோரின் நலனுக்காக பாடுபட்டு வருகிறார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.