மது போதையால் தடுமாறி விழுந்து உயிரை பறிகொடுத்த ஸ்ரீதேவி ! வெளிவந்தது பிரேத பரிசோதனை ரிப்போர்ட் ! அதிர்ச்சி தகவல்கள் உள்ளே !!

சினிமா

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழிகளில் நடித்தவர் நடிகை ஸ்ரீதேவி. கடந்த 1967-ஆம் ஆண்டு கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆன இவர் அதன் பின் நடிகர்களான ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடித்து தனக்கென்று திரையுலகில் தனி முத்திரை பதித்தார்.

துபாயில் திருமண விழா ஒன்றில் பங்கேற்க குடும்பத்துடன் ஸ்ரீதேவி சென்றுள்ளார். ராஸ் அல் கைமா நகரில் உள்ள ரிசார்ட்டில் அவர் தங்கியிருந்தார். இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து உடனடியாக அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

54 வயதே நிரம்பிய ஸ்ரீதேவியின் திடீர் மரணச் செய்தி பாலிவுட், கோலிவுட் திரைப் பிரபலங்களை மட்டுமல்ல இந்திய சினிமா ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. 1969 ஆம் ஆண்டில் வெளியான துணைவன் திரைப்படத்தில் நான்கு வயது குழந்தை நட்சத்திரமாக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த ஸ்ரீதேவி இந்தி திரையுலகின் லேடி சூப்பர்ஸ்டாராக வெகுகாலம் கோலோச்சியவர்.

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மனங்களைக் கவர்ந்த ஸ்ரீதேவிக்கு, கடந்த சனிக்கிழமை கடைசி நாளாக அமைந்துவிட்டது. அவரது வாழ்க்கையின் கடைசி நிமிடங்களில் என்ன நடந்தது என்பது குறித்து துபாய் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இது குறித்து தெரிந்துகொண்டோம்.

நடிகை ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் காவல் துறையினர் புதிய தகவலை வெளியிட்டுள்ளனர்.திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது.

மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது. இதனையடுத்து துபாய் போலீசார் தரப்பில் பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டனர். அதேபோல், அந்நாட்டு போலீசாரும் மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், ஸ்ரீதேவியின் உடலைக் கொண்டு வருவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் தடயவியல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீதேவி மரணம் ஒரு விபத்து என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “குளியல் அறை தொட்டியில் ஸ்ரீதேவி தவறி விழுந்துள்ளார். அதிக அளவு ஆல்கஹால் உட்கொண்டு இருந்ததால் அவரால் தண்ணீரில் இருந்து எழ முடியவில்லை. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி இறந்துள்ளார். இது ஒரு விபத்துதான்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.