மரணத்தின் பிடியிலிருந்து அஜீத்தை மீட்டெடுத்த ஷாலினி! – வெளிவந்த செய்தி! கண்ணீரில் அஜித் ரசிகர்கள்!

சினிமா

அஜித் – ஷாலினியின் 18ஆவது திருமண நாள் நேற்று (24) கொண்டாடப்பட்டுள்ளது. காதல் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் ரியல் ஜோடி இவர்கள் என்றால் மிகையாகாது.மனைவியின் கனவுகளுக்காக உழைக்கும், உறுதுணையாக நிற்கும் கணவன் அஜித். கணவனின் பெரும் துயர் காலத்தில் பக்கபலமாக இருந்து மரணத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து வந்த மனைவி ஷாலினி.

பில்லா 2 படத்தில் “என் வாழ்க்கையில ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும்… ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்குனதுடா…” என்று கர்ஜித்திருப்பார் அஜித்.அது அவரது ரியல் வாழ்க்கைக்கும் பொருந்தும். அஜீத் போல அத்தனை நேர்மறை எண்ணங்கள், தைரியம், தன்னம்பிக்கை கொண்ட ஒரு நபரை காண்பது மிகவும் அரிது.

தான் திரைப்படங்களில் ஏதேனும் வித்தியாசமான கெட்டப் போட்டால், அதனுடனே வீட்டிற்கு சென்று ஷாலினி முன்பு தோன்றி அவரை ஆச்சரியப்படுத்த அஜீத் தவறியதே இல்லை. சிட்டிசன் படப்பிடிப்பின் போது தான் போட்ட ஒவ்வொரு கெட்டப்புடன் ஷாலினியை வீட்டில் சந்தித்து இன்ப அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளார்.

ஒவ்வொரு உறவில் காதல், நெருக்கம் குறையாமல் இருக்க தேவையே இப்படியான எதிர்பாராத இன்ப அதிர்ச்சி தான். அமர்களம் படப்பிடிப்பு தளத்தில் தான் இவர்களுக்குள் காதல் மலர்ந்தது .

ஷாலினி மீது தனக்குள்ள விருப்பத்தை சுற்றி வளைக்காமல் நேராக அவரிடமே கூறிவிட்டார் அஜீத். ஏற்கெனவே அவர் மீது பிரியம் கொண்டிருந்த ஷாலினி, வீட்டில் அப்பாவிடம் பேசுமாறு கூறியுள்ளார்.அஜீத் – ஷாலினி இருவருக்குள்ளும் காதல் பூத்துவிட்டது என்று அமர்களம் படப்பிடிப்பின் போதே செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.

திரையுலக பிரபலங்கள் என பலரும் இந்த ஜோடியின் திருமண நாளுக்காக காத்திருந்தனர்.அஜீத்தின் பாசிட்டிவ் திங்கிங் போலவே, அவர் வாழ்வில் அப்போது எல்லாமே பாசிட்டிவாக நடந்தது. தனது காதல் துணையை ஏப்ரல் 24, 2000 அன்று கரம் பிடித்தார் அஜீத்.

அஜீத்தையும் ரேஸிங்கையும் பிரிக்க முடியாது என்பது அனைவரும் அறிந்தது தான். சோழவரத்தில் நடந்த ஒரு ரேஸில் அஜித் பங்கெடுத்துக் கொண்டார். திடீரென எதிர்பாராத தருணத்தில் அஜீத் விபத்தில் சிக்கினார். ஏற்கெனவே பல முறை அவர் இப்படியான விபத்தில் சிக்கியதுண்டு. ஆனால், இந்த முறை விபத்து மிக அபாயமானதாக இருந்தது. அஜித்தின் முதுகு எலும்புகள் உடைந்து சிதறின. அவர் மீண்டு வருவாரா என்று அச்சப்படும் அளவிற்கு அந்த விபத்தும், அதனால் அஜீத்திற்கு உண்டான எலும்பு முறிவுகளும் மிகவும் அபாயமனதாக இருந்தது.

அந்த விபத்தில் இருந்து அஜீத் மீண்டுவர இரண்டே விஷயங்கள் தான் காரணம். ஒன்று அஜீத்தின் தைரியம் மற்றும் இரண்டாவது ஷாலினியின் ஊக்கமும் காதலும். அதன் பிறகு உடல் ரீதியாக அஜீத் பல ஆரோக்கிய சிக்கல்களை எதிர்கொண்டார். அவரது உடல் எடை கூட துவங்கியது. நிறைய மருத்துவம், மருந்துகள் என எடை போட துவங்கினார்.

இதை அறியாமல் சிலர் அஜீத்தை குண்டாகி விட்டார் என்று கூறி கேலியும் செய்தனர். அஜீத் திருமணத்திற்கு முன்னர் புகைக்கும் பழக்கம் கொண்டிருந்தாராம். ஷாலினிக்கு புகைப்பது பிடிக்காது என்று அறிந்ததில் இருந்து இன்று வரை அஜீத் புகைப்பிடிப்பதே இல்லை.சினிமாவில் மட்டும் காட்சிகளுக்காக புகைக்கும் அஜீத் ரியல் லைப்பில் புகையை விட்டு 17 ஆண்டுகள் ஆகின்றன. ஷாலினிக்காக எதையும் செய்ய தயங்கமாட்டார் அஜீத். அந்த அளவிற்கு ஷாலினி மீது காதல் வைத்துள்ளார் தல.

இன்றும் தமிழக திரையுலகில் நிறைய நடிகர்களை சிறந்த நடிகர், மாஸ் ஹீரோ, கிளாஸ் ஹீரோ என்று புகழ்வார்களே தவிர, ஜென்டில்மேன் என்று புகழப்படும் ஒரே நடிகர் அஜீத் தான்.இவருடன் நடித்த பல நடிகைகள் கூறும் ஒரு வார்த்தை அவரை போல ஜென்டில்மேன் வேறு யாரையும் திரை உலகில் காண இயலாது என்பது தான்.

அனைத்து பெண்களும் தனக்கான வருங்கால கணவன் இப்படியாக தான் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.பல பெண்கள் 90களில், 2000களில் அஜீத்தை போன்ற ஜோடி வேண்டும் என்று விரும்புயுள்ளனர். பல இளைஞர்கள் இவரைப்போல ஆகவேண்டும் என்று விரும்பி இருக்கிறார்கள்.

ஆனால், அவர்களுக்கு எல்லாம் அஜீத் கூறுவது… “நீங்கள் காணும் அஜீத் வேறு, உண்மையான அஜீத் வேறு. என் வாழ்வில் நான் கடந்து வந்த வலிகள் அதிகம்.எனவே, ஒரே ஒரு அஜீத் போதும். நீங்கள் அவ்வளவு வலிகளை கடந்து வர வேண்டாம்”, என்றே பல இடங்களில் கூறியிருக்கிறார்.நல்ல நடிகனாக மட்டுமின்றி, நல்ல கணவனாக, நல்ல தகப்பனாக, நடிகன் என்ற கெத்து காண்பிக்காமல், ஷூட்டிங் முடிந்த பிறகு தனது இயல்பு வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

பிரோமஷனுக்கு வருவதில்லை என்று சிலர் புகார் கூறினாலும் அதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.பிரமோஷனை காட்டிலும் தயாரிப்பாளருக்கு வேறு வகையில் நிறைய உதவிகள் செய்பவர் அஜீத். ரீல் லைப், ரியல் லைப் இரண்டிலுமே ஒரு சிறந்த ஜென்டில்மேன்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.