மரத்தில் ஏறி அட்டகாசம் செய்த பிரபல நடிகை – யார் தெரியுமா இது? புகைப்படங்கள் உள்ளே!

சினிமா

பிந்து மாதவி தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார் இவர் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பொக்கிஷம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார்.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மதனப்பள்ளியில் பிறந்தவர் பிந்து மாதவி. அவரது தந்தை வணிகவரித் துறையின் துணை ஆணையாளாரப் பணியாற்றிதால், அவரது சிறுவயதில் திருப்பதி, நெல்லூர், குண்டூர், விஜயவாடா, ஹைதராபாத் எனப் பல நகரங்களில் வசித்தார். பின்னர் சென்னையில் நிரந்தரமாக அவரது குடும்பம் வசிக்கத் தொடங்கிய போது அங்கு பிந்து மாதவி படித்தார். வேலூர் தொழிநுட்பக் கழகத்தில் உயிரித் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றார்.

கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போது சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரத்தில் நடித்தார். டாடா கோல்டின் தனுஷ்க் விளம்பரத்தில் நடித்தது, இவர் தெலுங்கு திரைப்பட உலகுக்குள் நுழைய உதவியது. இவரது பெற்றோர் இவர் திரைப்பட நடிகையாவதை விரும்பவில்லை. தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்த இவரை இயக்குனர் கௌதம்மேனன் தான் தயாரித்த வெப்பம் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதைத் தொடர்ந்து மேலும் இரு தமிழ்த் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் கிடைத்தது.

இப்படி தமிழில் பல படங்களில் நடித்த இவருக்கு 2016 ஆம் ஆண்டு நடித்த ஜாக்சன் துறையே இவருக்கு இறுதி படமாக உள்ளது அதற்க்கு பின் இவர் எங்கே போனார் என்று கேட்கும் அளவிற்கு வாய்ப்பில்லாமல் இருக்கிறார். பின்னர் ஒரு வருட இடைவெளிக்கு பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பங்கேற்றார்.

பிக் பாஸிலே பாத்திருப்போம் இவர் சற்று விளையாட்டு குணம் கொண்டவரென்று . அவர் அடிக்கடி சில கிறுக்குத்தனத்தை செய்வார் என்று மக்கள் அறிந்த ஒன்றுதான். தற்போது அதனை நிறுபிக்கும் வகையில் மரத்தில் ஏறி அட்டகாசம் செய்து புகைப்படமொன்றை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்களும், நெட்டிசன்களும் இவரை கலாயித்து வருகின்றனர்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.