மா கா பா ஆனந்த் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆவார் மேலும் திரைப்பட நடிகரும் கூட . இவர் பண்பலைத் தொகுப்பாளராகவும், தொலைக்காட்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இவர் ஆரம்ப காலத்தில் சூரியன் பண்பலையில் நகைச்சுவை நிகழ்ச்சிகளை தொகுத்து வந்தார்.
ரேடியோ மிர்சி பண்பலையில் தொகுப்பாளராக ஆறு ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர், அது இது எது மற்றும் சினிமா காரம் காபி போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கியவராவார்.
நடிகர் கிருஷ்ணாவுடன் இணைந்து வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தில் நடித்தார்.மா.கா.பா ஆனந்த 1986ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். IVar தன்னுடைய கல்லூரி படிப்பை சென்னையில் முடித்துவிட்டு ஒரு பி.பி.ஒ கம்பெனியில் வேலை செய்து வந்தார்.
பின்னர் வெகு நாட்களாக அங்கு வேலை செய்த அவர் அங்கு ஆரம்பம் முதலே சுஸினா ஜார்ஜ் என்ற பெண்ணுடன் நட்பாக பழகி வந்தார் பிநாளில் இது காதலாக மலர்ந்தது. சுஸினா ஜார்ஜ் பாண்டிசேரியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் ஆங்கிலோ இந்தியன் வம்சாவழியை சேர்ந்தவர் என்பதால் முதலில் இவர்களது காதலுக்கு மா கா பா ஆனந்த் வீட்டில் ஒத்துக்கொள்ளவில்லையாம் .
சுஸினாவுடன் காதல் ஏற்பட்டு அவரை திருமணம் செய்துகொண்டார் மா.கா.பா. பின்னர் துபாயில் உள்ள ஒரு தமிழ் எம்.எம்மில் வேலை கிடைத்து அங்கு சென்று 6 வருடம் வேலை செய்தார்..
அதன்பின்னர் இந்தியா காந்த அவருக்கு விஜய் டிவியில் வேலை கிடைத்தது. தற்போது மா.கா.பா விற்கும் சுஸினாவிற்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் ஆகியோர் உள்ளனர்.


