மேடையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை கணவருக்கு முத்தம் கொடுத்த தொகுப்பாளினி டிடி !! வைரல் புகைப்படம் இதோ !!

சினிமா

தொலைக்காட்சியில் சுமார் 20 ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி பல விருதுகளை பெற்று பிரபலமானவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காஃபி வித் டிடி, ஜோடி நம்பர் 1 என் கிட்ட மோதாதே உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியவர்.

தற்போது திருமணம் செய்தவரை விவாகரத்து செய்து தனிமையில் வாழ்ந்து வரும் டிடி, லாக்டவுன் முழுவதும் இணையத்தில் ரசிகர்களுடன் பேசிவந்தார். இதையடுத்து மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்நிலையில், தனியார் இணையதள விருதுவிழாவிற்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார் டிடி.

அங்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லைக்கு கணவராக நடிக்கும் குமரனுக்கு விருதை வழங்கியபோது அவரை இறுக்கியணைத்து ஆசையாக கண்ணத்தில் முத்தம் கொடுத்துள்ளார் டிடி.

தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.