தற்போதைய காலகட்டத்தில் தமிழ் நாட்டின் டாப் வரிசையில் இருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படம் மக்களிடத்தில் நல்ல விமர்சனம் பெற்று வசூலை அள்ளி குவித்து வருகிறது.
தளபதி விஜய்யை பலருக்கும் பிடிக்க காரணம் அவரின் எளிமையான பண்பு. ஆனால் பிடிக்காத ஒன்று, அவர் தனது சொந்த அப்பாவிடம் பேசாமல் இருப்பது.
விஜய்க்கும் அவரின் தந்தை எஸ். ஏ. சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பேசிக்கொள்வதில்லை. இதை குறித்து சந்திரசேகரும் கூறியுள்ளார்.
விஜய், நெப்போலியன் போக்கிரி படத்தில் இருவரும் சேர்ந்து நடிக்கும் போது அவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், ‘நீங்களும் நடிகர் விஜய்யும் பிரச்சனைகளை மறந்து மீண்டும் இணைந்து நடிக்க வாய்ப்புள்ளதா? என்று கேட்டனர்.
அதற்கு பதில் அளித்த அவர், “எனக்கும் விஜய்க்கும் போக்கிரி படத்தில் சண்டை ஏற்பட்டது. அதன் பின்னர் 15 -து ஆண்டுகளாக நாங்கள் பேசிக்கொவத்தில்லை. நான் விஜய்யுடன் நடந்த பிரச்சனைகளை மறந்து மீணடும் இணைந்து நடிக்க தயார். அதற்கு அவரும் தயாராக இருப்பாரா?.
விஜய் தனது சொந்த அம்மா அப்பாவிடம் கூட பேசுவதில்லை. இந்த செய்தி அமெரிக்கா வரை வந்துள்ளது. இந்த தகவல் முற்றிலும் உண்மையா பொய்யா என்று எனக்கு தெரியவில்லை. முதலில் விஜய், அம்மா அப்பாவிடம் சமரசம் ஆகக்கட்டும்” என்று கூறியிருந்தார்.