தமிழில் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் ஹிட்டடித்த ஷோ என்றால் அது பிக் பாஸ் தான்.கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி 5 சீசன்களை தாண்டி வெற்றிகரமாக ஓடி தற்போது ஆறாவது சீசனிலும் ஆதி எடுத்து வைத்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மக்களுக்கு பரிச்சியமான பலர் கலந்துகொண்டால் இந்த சீசன் மக்கள் மனதில் அந்த அளவிற்கு ஒரு நல்ல இடத்தை பெறவில்லை என்றுதான்சொல்லவேண்டும்.
காரணம் ஆரம்பித்த முதல் நாளில் இருந்தே சுவாரசியம் இல்லாமல் சென்றதுதான்.என்னதான் வீட்டிற்குள் பல சண்டை சச்சரவுகள் நடந்தாலும் மக்களால் அது விரும்பப்படவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
இறுதி நாட்களை எட்டியுள்ள இந்த சீசனை யார் ஜெயிக்க போகிறார்கள் என்ற கருத்து நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கிறது.சொல்லப்போனால் மக்களுக்கு இந்த சீசனில் யாரையுமே பிடிக்கவில்லை.
இந்தநிலையில் கடந்த வாரம் வெளியேறிய ஏடிகே வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.முன்னணி சீரியல் நடிகை ரக்ஷிதாவை விட அதிகமாக சம்பளம் வாங்கியுள்ளாராம்.97 நாட்கள் உள்ளே இருந்த ஏடிகே வாங்கிய சம்பளம் 18 லட்சத்திற்கும் மேல் என தெரியவந்துள்ளது.