ராஜாராணி சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை!- அதிர்ச்சியில் ரசிகர்கள்…! இவருக்கு பதில் இந்த நடிகையா! புகைப்படம் உள்ளே!

Uncategorized

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ சீரியலுக்கு மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஜய் டெலிவிஷன் அவார்டில், இந்த ஆண்டின் சிறந்த சீரியலுக்கான விருதையும் இந்த சீரியல் பெற்றது. இந்த சீரியலில், இரண்டு முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்த நடிகைகள் விலகியிருப்பது, ரசிகர்களிடம் குழப்பத்தையும் கேள்வியையும் எழுப்பியுள்ளது. ‘தங்களுக்குப் பிடித்தமான இவர்களை மிஸ் செய்வதாகப் பலரும் சமூக வலைதளத்தில் பதிவுகளை அள்ளித் தெளித்துள்ளனர்.

இந்த சீரியலில் பல நடிகைகள் நடித்து வருகின்றனர் , அதில், செம்பாவாக நடித்து வரும் ஆல்ய மானசாவிற்கு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமீபத்தில் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1 மில்லியன் பேர் தொடருகின்றனர் என்று எனது ரசிகர்களுக்கு மிக்க நன்றி என்று பதிவும் போட்டிருந்தார்.

இதனால், குறித்த சீரியல், இவருக்காக தான் சிறப்பாக ஓடுகிறது என்று அனைவரின் தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது. இவரைப் போலவே, நாதஸ்வரம் சீரியலில் மகா என்ற கதாப்பாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை கீதாஞ்சலி. இவருக்கும் ரசிகர்கள் அதிகளவில் உள்ளனர்.இந்த சீரியலில், வினோதினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அவர், இப்போது ராஜா ராணி சீரியலை விட்டு விலகியதாக கூறப்படுகிறது.

ஏன் இந்த முடிவு என செய்தியாளர்களிடம் கூறிய அவர்,  ராஜா ராணி’ சீரியலின் வினோ கேரக்டர் எனக்குப் பயங்கர ரீச் கொடுத்துச்சு. அந்த சீரியலால் நிறைய ஃபேன்ஸ் கிடைச்சிருக்காங்க. ஒரு வருஷம் அதில் ஒர்க் பண்ணியிருக்கேன். கோ-ஆர்ட்டிஸ்ட் எல்லோருடனும்  நான் பயங்கர குளோஸ். செட்டில் எப்பவும் துருதுருனு இருப்பேன். எல்லோரும் ஃபேமிலி மாதிரியே பழகுவோம்.

எனக்கு ஹெல்த் இஷ்யூ இருக்கிறதால் டாக்டர்ஸ் மூணு மாசம் ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க. சீரியலில் என் கேரக்டருக்கு பிரேக் விடமுடியுமான்னு டைரக்டர்கிட்ட கேட்டேன். ‘இல்லைம்மா, இந்த கதாபாத்திரம் தொடர்ந்து இருக்கணும்’னு சொல்லிட்டார். அதனால், சீரியலிலிருந்து விலகவேண்டியதாயிடுச்சு என கூறியுள்ளார். மேலும் இவருக்கு பதிலாக பிரபல தொலைகாட்சியில் தொகுப்பாளாராக இருப்பவரிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம் .