ரோஜா பட நடிகை மதுபாலாவின் மகள் யார் தெரியுமா? – அப்படியே அம்மாவை உரித்துவைத்துள்ளார் -ஆச்சர்யமூட்டும் புகைப்படங்கள் உள்ளே

சினிமா

‘அழகன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மதுபாலா. தொடர்ந்து ரோஜா, வானமே எல்லை, செந்தமிழ் செல்வன், ஜென்டில்மேன், பாஞ்சாலங்குறிச்சி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, இந்தி என்று பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

1999-ம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தற்போது இரண்டு குழந்தைக்கு தாயாக உள்ள மதுபாலா, நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார்.

தற்போது தமிழில், ”வாயைமூடி பேசவும்” என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

அதில் பங்கேற்ற மதுபாலா, தினமலருக்கு அளித்த சிறப்பு பேட்டி, நான் சினிமாவுக்கு வந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளேன்.

ஆனால் தமிழில், ரசிகர்கள் கொடுத்த மரியாதை என்றும் மறக்க முடியாது. ரொம்ப நாள் கழித்து மீண்டும் தமிழ் ரசிகர்களை சந்திக்க வருகிறேன். வாயை மூடி பேசவும் படத்தில் எனது ரோல் ரொம்ப பிடித்து போனதால் இப்படத்தில் நடிக்க சம்மதித்தேன்.

இப்போது நிறைய புதுமுகங்கள் வித்தியாசமான கதைகளத்துடன் சாதிக்கிறார்கள். நானும் வித்தியாசமான கேரக்டரில் நடிக்க ஆசைப்படுகிறேன். மீண்டும் நிறைய தமிழ் படங்கள் பண்ண ஆசை, நல்ல கதைகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறினார்.

இவர் 1999 ஆம் ஆண்டு பழம்பெரும் நடிகை ஹமா மாலினியின் உறவினர் ஆனந்த ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு இரு பெண் குழந்தைகள் பிறந்தது.ஒரு மகள் 18 வயது நிரம்பிய அமெயா மற்றொரு மகள் 16 வயது நிரம்பிய கையா. ஆனால் தனது இளைய மகள் கையா தான் தனக்கு மிகவும் பிடித்த மகள் என்று எப்போதும் கூறுவாராம் நடிகை மதுபாலா.

அவரின் குடும்ப புகைப்பட தொகுப்பு வீடியோவாக இதோ :

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.