“வாம்மா மின்னலு “அந்த பொண்ணு யார் தெரியுமா ?? தெரிஞ்சா அசந்து போவீங்க !! புகைப்படங்கள் உள்ளே!

Uncategorized சினிமா

“நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த சினிமா வாழ்க்கை, நிஜத்தில் வேற மாதிரி இருக்கு. ஆனாலும், என் கொள்கையில் உறுதியா இருக்கேன். எனக்கு வரும் கேரக்டர்களில் திருப்திகரமா நடிக்கிறேன்” என்கிறார், ‘மாயி’ படத்தின் ‘மின்னல்’ தீபா. ஜீ தமிழ் சேனலின் ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடித்துவருபவர்.

” ‘மாயி’ படத்தில் நடிக்கும்போது உங்க கேரக்டர் பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா?” 

“இல்லவே இல்லை. அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துக்கப் போனால், பெரிய படையே காத்திருந்துச்சு. ‘இந்த க்யூவுல நான் நிற்க மாட்டேன்’னு என் அப்பாகிட்ட அடம்பிடிச்சேன். அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் அப்பாவின் நண்பர். அவர் மூலமா டைரக்டரைச் சந்திச்சோம். அவர், கண்ணை ஒரு மாதிரியா உருட்டி நடிச்சுக்காட்டச் சொன்னார். ‘அப்படியெல்லாம் எனக்கு நடிக்க வராது’னு சொல்ல, ‘அப்படின்னா கிளம்புங்க’னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன். அப்புறம், அந்த டைரக்டரே அப்பாகிட்ட என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி கண்ணை உருட்டி நடிக்க பிராக்டீஸ் பண்ணினேன். ஆடிஷனில் செலக்ட் ஆனேன். டல் மேக்கப் போட்டாங்க. ‘வாம்மா மின்னல்’ என்கிற அந்த சீனில் நடிச்சேன். ஒரே ஒரு சீன், இதுல என்ன பெரிய ரீச் கிடைச்சுடப்போகுதுனு நினைச்சேன். ஆனால், இப்போவரை ‘மின்னல்’ தீபானுதான் என்னைக் கூப்பிடறாங்க. அந்த சீனில் நடிக்கும்போது, ‘அங்கே பாரு… அங்கே பாரு சரத்து… அந்தப் பொண்ணு எப்படி நடிக்குது பாரு’னு சொல்லி, வடிவேல் சார் பயங்கரமா சிரிச்சார்.”

“அப்புறம் நடிப்பையே கரியரா செலக்ட் பண்ணிட்டீங்களா?” 

“ஸ்கூல் முடிச்சு, காஸ்டியூம் டிசைனிங்ல கவனம் செலுத்த நினைச்ச நேரத்தில்தான் ‘மாயி’ படத்தில் நடிச்சேன். சினிமா மேலே பெரிய ஆர்வம் வந்துடுச்சு. நல்ல பெயரும் புகழும் பெறணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், அந்த ஆசை நிறைவேறலை. நிறையப் படங்களில் நடிச்சாலும் எல்லாமே சின்னச் சின்ன கேரக்டர்தான். நடிப்பு தாண்டி சினிமாவில் பெண்களுக்கு நிறம் முக்கியமா பார்க்கப்படுதுன்னு நினைச்சேன். ஆனால், நிறம் மட்டும் சினிமாவில் புகழ்பெற முக்கியமில்லைனு சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.அட்ஜஸ்ட்மென்ட்டை முக்கியமா எதிர்பார்க்கிறாங்க. அதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. அதனால், பெரிய வாய்ப்புகள் கிடைக்கலை. நாமாக வாய்ப்பு கேட்டுப்போனால், அட்ஜஸ்ட்மென்ட்டை ஓப்பனா கேட்பாங்க. அதனால், இதுவரை யார்கிட்டயும் வாய்ப்புத் தேடிப் போனதில்லை. என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கலையேனு நிறையவே வருத்தப்பட்டிருக்கேன்.”

“சின்னத்திரை உங்களுக்குக் கைக்கொடுத்ததா?” 

“ஒரு கட்டத்தில் சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்துச்சு. ஜெயா டிவி ‘மன விலங்கு’ சீரியலில் நடிச்சேன். அதிலும் ஹீரோயின் சிஸ்டர் ரோல்தான். ‘ரோமாபுரி பாண்டியன்’, ‘செல்லமே’ உள்பட பத்துக்கும் மேற்பட்ட சீரியல்களில் நடிச்சேன். சின்னத்திரையிலும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்னை இருக்கு. ஆனால், சினிமா அளவுக்கு இல்லை. எப்போதும் நடிச்சுட்டே இருக்கணும். புகழ் பெறணும். புகழைத் தக்கவெச்சுக்கணும்னு நினைக்கிற சிலர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ணிக்கிறாங்க. அது எனக்குப் பிடிக்கலை. சுயமரியாதையோடு வாழவே நினைக்கிறேன். அப்படித்தான் இப்போ வரை இருக்கேன். அதனால், கிடைக்கும் குறைந்த வாய்ப்பில் சிறப்பா நடிச்சுட்டிருக்கேன்.”

“அப்புறம் நடிப்பையே கரியரா செலக்ட் பண்ணிட்டீங்களா?” 

“ஸ்கூல் முடிச்சு, காஸ்டியூம் டிசைனிங்ல கவனம் செலுத்த நினைச்ச நேரத்தில்தான் ‘மாயி’ படத்தில் நடிச்சேன். சினிமா மேலே பெரிய ஆர்வம் வந்துடுச்சு. நல்ல பெயரும் புகழும் பெறணும்னு ரொம்பவே ஆசைப்பட்டேன். ஆனால், அந்த ஆசை நிறைவேறலை. நிறையப் படங்களில் நடிச்சாலும் எல்லாமே சின்னச் சின்ன கேரக்டர்தான். நடிப்பு தாண்டி சினிமாவில் பெண்களுக்கு நிறம் முக்கியமா பார்க்கப்படுதுன்னு நினைச்சேன். ஆனால், நிறம் மட்டும் சினிமாவில் புகழ்பெற முக்கியமில்லைனு சீக்கிரமே தெரிஞ்சுகிட்டேன்.அட்ஜஸ்ட்மென்ட்டை முக்கியமா எதிர்பார்க்கிறாங்க. அதில் எனக்கு எப்போதும் உடன்பாடில்லை. அதனால், பெரிய வாய்ப்புகள் கிடைக்கலை. நாமாக வாய்ப்பு கேட்டுப்போனால், அட்ஜஸ்ட்மென்ட்டை ஓப்பனா கேட்பாங்க. அதனால், இதுவரை யார்கிட்டயும் வாய்ப்புத் தேடிப் போனதில்லை. என் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கலையேனு நிறையவே வருத்தப்பட்டிருக்கேன்.”

“ஃபேமிலியை ரன் பண்றதில் சிரமம் இல்லையா?” 

(சிரிப்பவர்) “சிரமம்தான். இப்போதைக்கு ஒரு சீரியல் நடிக்கிறேன். ஷூட்டிங் இல்லாத நாள்களில் வீட்டிலிருந்தே காஸ்ட்யூம் டிசைனிங் வொர்க் பண்றேன். ‘ரோமாபுரி பாண்டியன்’ சீரியலில் காஸ்டியூம் டிசைனரா வொர்க் பண்ணினேன். காஸ்டியூம்ஸ் மற்றும் அஸசரீஸை தயாரிச்சு விற்பனை செய்றேன். ஓரளவுக்கு வருமானம் வருது. என் கணவர் ‘குட்டி’ ரமேஷ், ரொம்ப அன்பானவர். ‘மானாட மயிலாட’ நிகழ்ச்சியில் கோரியோகிராபரா இருந்தார். பாபா பாஸ்கர் மாஸ்டர்கிட்ட அசிஸ்டென்டா வொர்க் பண்றார். பெற்றோர், மாமனார், மாமியார் என திருப்தியா இருக்கேன்.”

“வடிவேலுவுடன் நடிச்ச அனுபவம் பற்றி…” 
” ‘தமிழ்’, ‘ஆளுக்கொரு ஆசை’ எனப் பல படங்களில் அவருடன் காமெடி ரோல் பண்ணியிருக்கேன். அவர் எப்போதும் என்னை ‘மின்னல்’னுதான் கூப்பிடுவார். திறமையான கலைஞர். அவர் மேல எப்பவும் எனக்கு மரியாதையை உண்டு ”

” ‘யாரடி நீ மோகினி’ சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி…” 

”சென்டிமென்ட் மற்றும் திகில் கலந்த சீரியல். பேய்கிட்ட அடிவாங்கும் அனுபவம் நிறையவே இருந்துச்சு. திகில் காட்சிகள் நல்லா வரணும்னு, சக ஆர்டிஸ்ட் பலரும் நிஜமாவே அடிவாங்கி நடிச்சோம். சீரியலில் என் கேரக்டர் பெயர், பூங்கோதை. என் ஜோடியா வர்ற அர்விந்த் என்னை ‘ஜிலேபி’னு கூப்பிடும் காட்சிகள் நிறைய வரும். அதனால், இப்போ வெளியில் என்னைப் பார்க்கிறவங்க ‘ஜிலேபி’னு கூப்பிடறாங்க.”

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.