தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை செய்து வருகிறார். இதற்கிடையில் தன்னுடைய மனைவி சங்கீதாவை சில மாதங்களாக ஒதுக்கி வைத்து வருவதாகவும் சங்கீதா அவரது அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டார் என்றும் பல செய்திகள் வைரலாகியது.
இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகாத நிலையில், விஜய் கீர்த்தி சுரேஷ் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் பகிரப்பட்டு விஜய்யை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
இந்நிலையில் விஜய் – சங்கீதா விவாகரத்து குறித்து தயாரிப்பாளரும் நடிகருமான JKS. கோபி ஒரு பதிவினை போட்டு வதந்தி பரப்புபவர்களை கண்டுத்துள்ளார்.
கடந்த இரண்டு மாதமாக நடிகர் விஜய் அவர்கள் இல்லற வாழ்க்கை குறித்தும் அவரது மனைவி குறித்தும் சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
அது முழுக்க முழுக்க பொய். ரசிகர் சண்டை என்பது வேறு. அவர்களை கேலி செய்கிறோம் வசூல் ரீதியாக சண்டை போட்டுக் கொள்கிறோம் இது எதார்த்தம்” என்று கூறியுள்ளார்.
தற்போது பிரபல பத்திரிக்கையாளரும் சினிமா விமர்சகருமான அந்தனன் விஜய் – சங்கீதா விவகாரம் குறித்த உண்மையை கூறியுள்ளார்.
அதில், விஜய்க்கும் சங்கீதாவுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் சென்னையில் இருக்கும் விஜய்யின் வீட்டில் இருவரும் இருக்கிறார்கள். வெளிநாட்டில் இருக்கும் அப்பா வீட்டிற்கு சென்றுவிட்டு விஜய் வீட்டில் தான் விஜய் மனைவி சங்கீதா இருப்பதாகவும் கூறியுள்ளார் அந்தனன்.