விஜய் டிவி க்கு போட்டியாக ஜீ தமிழ் நடத்தும் புதிய பிக் பாஸ்!! ஒரே வீட்டில் 26 நடிகர் நடிகைகள்!!

சினிமா

ஜீ தமிழ் தொலைக்காட்சி பிக்பாஸ் நிகழ்ச்சி போலவே மைக் அணிந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 26 நடிகர் நடிகைகளை , ஒரே வீட்டில் மூன்று நாட்கள் தங்க வைத்து போட்டி நடத்தப்பத்துள்ளது. அந்த நிகழ்ச்சிக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.

விரைவில் நடக்க இருக்கும் ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2020 நிகழ்ச்சியின் ஒரு முன்னோட்டமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 26 நட்சத்திரங்கள் மூன்று நாட்கள் ஒரே வீட்டில் இருக்கப் போகின்றார்களாம். அவர்களுக்கு என்று தனியாக மெத்தைகள், அறைகள் மற்றும் தேவையான பொருட்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலர் “இது குட்டி பிக்பாஸ் மாதிரியே இருக்கே” என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.