நடிப்பு, நடனம், இயக்கம், பாடகர் என பன்முகங்களை கொண்டவர் தான் உலகநாயகன் கமல் ஹாசன். இவரின் இரண்டு மகள்களும் திரைத்துறையில் ஹீரோயினாக நடித்து வருகின்றனர்.
இவரின் மூத்த மகள் ஸ்ருதி ஹாசன் 2011 -ம் ஆண்டு வெளியான ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின்னர் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வால்டர் வீரய்யா, வீர சிம்ஹா ரெட்டி போன்ற திரைப்படங்கள் வெளியானது.
தற்போது ஸ்ருதி ஹாசன் தனது காதலனுடன் லிவிங்கில் இருந்து வருகிறார். இவரை காதலிப்பதற்கு முன்பு, தெலுங்கு நடிகர் நாக சைதன்யா தான் காதலித்து வந்தார்களாம்.
இவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரேக்அப் ஆனதாக கூறப்படுகிறது. இதன் பின்னர் தான் நாக சைதன்யா நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர்களும் 2021-ம் ஆண்டு விவகாரத்து பெற்றது குறிப்பிடத்தக்கது.