ஹன்சிகா வீட்டில் திடீரென திருமண ஏற்பாடு !! களைகட்டும் கொண்டாட்டம் !! மாப்பிள்ளை யார் தெரியுமா! புகைப்படங்கள் இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த எங்கேயும் காதல் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஹன்சிகா.

அதைத்தொடர்ந்து, தனுஷின் மாப்பிள்ளை படத்தில் நடித்தார். இதையடுத்து குறுகிய காலத்திலேயே விஜய், சூர்யா, சிம்பு போன்ற பிரபலங்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.

இதையடுத்து, தற்போது இவர் 50-வது படமான ‘மஹா’ ரிலீசுக்கு தயாராகி வருகிறது. நடிகை ஹன்சிகா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

இதனிடையே, நடிகை ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் தற்போது களைகட்டியுள்ளது. ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும், வருகிற மார்ச் 20-ந் தேதி, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்து இருக்கிறார்களாம்.

முழுக்க முழுக்க ராஜஸ்தான் மாநிலம் முறைப்படி நடைபெறும் இந்த திருமணம், 2 நாட்கள் கொண்டாட்டமாக நடக்கவுள்ளது.

இதற்காக ஹன்சிகா வீடு மற்றும் திருமணம் நடைபெறவுள்ள பகுதி முழுக்க விழாக்கோலம் ஜொலிக்க தொடங்கியுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்க திரைத்துறையில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு ஹன்சிகா அழைப்பு விடுத்துள்ளார்.