ஹோட்டலில் டேபிள் துடைத்து சம்பாதித்த பிரபல காமெடியன் – அடக்கொடுமையே இவருக்கு இப்படி ஒரு நிலைமையா !!

சினிமா

காமெடி நடிகர்கள் இப்போது தமிழ் சினிமாவில் நிறைய பேர் வந்துவிட்டார்கள். அவர்களை ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.இந்த நிலையில் சினிமாவிற்கு வருவதற்கு முன் காமெடி நடிகர்கள் என்ன வேலை செய்திருக்கிறார்கள் என்ற விவரம் இதோ.

சூரி ஊரில் பால் போடுபவர். சென்னை வந்ததும் பெயின்டர் வேலை பார்த்து வந்தார். பின் செட் அசிஸ்டென்ட்டாக பணியாற்றியுள்ளார்.தற்போது தமிழ் சினிமாவில் நம்பர் 1 காமெடியனாக உள்ளார்.

அப்புக்குட்டி வடபழனி சரவணபவன் ஹோட்டலில் டேபிள் துடைக்கும் வேலை. பின் சின்ன சின்ன வேடங்களில் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.தேசிய விருது வரை சென்று தற்போது நல்ல நிலைமையில் உள்ளார்.

வையாபுரி எக்மோர் வசந்தபவனில் சர்வர் வேலை, கல்யாண வீடுகளில் சமையல் என பார்த்துவந்த இவர் பாரதிராஜாவின் கருத்தம்மாவில் கண்டக்டராக அறிமுகமானார்.தற்போது பிக் பாஸ் வரை பெரிய பிரபலமாகி உள்ளார்.

ராம்தாஸ்நடிப்பு ஆசையில் சென்னை வந்து சாலைகளில் எல்லாம் தூங்கியிருக்கிறார். பின் குறும்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து நடித்துவந்த அவர் முண்டாசுப்பட்டியில் பிரபலமானார்.

ரமேஷ் திலக்சென்னையின் பிரபல எப்.எம்.மின் ஆர்.ஜே. அதன்மூலம் சின்ன சின்ன படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து பின் சூது கவ்வும் படத்தில் முக்கிய கதாபாத்திரம்.பின்னர் நேரம்,காக்கா முட்டை போன்ற பல படங்களில் நடித்தார்.

காளி வெங்கட்காய்கறி வியாபாரம், டீ கடைகளில் வேலை பார்த்திருக்கிறார். பின்னரே சினிமா வாய்ப்பு கிடைத்திருக்கிறது.ஒரு சிறந்த குணசித்திற நடிகராகவும் காளி வெங்கட் உள்ளார்.

மதுமிதா விஜய் டிவியின் லொள்ளு சபா மூலம் பிரபலமாகி சினிமாவிற்குள் வந்திருக்கிறார்.யோகி பாபு ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு பின் உதவி இயக்குனர் ஆனார். பின் அமீரின் யோகி படத்தில் அறிமுகமானார்.தற்போது முக்கியமான காமெடியன்களுள் அவரும் ஒருவராய் இருக்கிறார்.