10 நாட்களில் உதிர்ந்த முடிகளை திரும்பப்பெற இதை பண்ணுங்க !!

Beauty Tips ஆரோக்கியம்

நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக் கொட்டுதல் உண்டாகும்.
அடிக்கடி காபி, டீ0 போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப்பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப்படுகிறது.

எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)
என்ணெய் பதார்த்தங்கள்(oily food)
புளிப்பு உணவுகள் (acidic food )
இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.

அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடிகொட்டுதல் உண்டாகும்.
உடம்பில் இரத்தம் குறைந்து உண்டாகும் இரத்த சோகை (anemia) நோயினாலும் உடம்பில் காணும் பொதுவான பலஹீனத்தாலும் (general debility), மனச்சோர்வு, மன உளைச்சல், கோபம் போன்ற காரணங்களினாலும் தலைமுடி சார்ந்த குறைகள் உண்டாகும்.
டைபாய்டு காய்ச்சல் மிக முற்றிய நிலையிலும், பொடுகு மற்றும் பேன் அதிகரித்த நிலையிலும் ஹார்மோன் பற்றாக்குறை (hormonal imbalance) நிலையிலும் முடிக் கொட்டுதல் உண்டாகும் .

2. காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும் .
ஜூனிஃபர் பெரி (junifer berry) –5 சொட்டு
எலாங் எலாங்(yalang yalang) –7 சொட்டு
நல்லெண்ணெய் –100 மி.லி
ஆமணக்கு எண்ணெய் -10மி.லி
இவையனைத்தையும் ஒன்றாகக் கலந்து தலை முழுவதும் பூசி மசாஜ் செய்ய வேண்டும் . மசாஜ் செய்து 6 மணி நேரம் கழித்து குளிக்க, முடி உதிரல் குறைபாடு உடனே நீங்கும்

ஸ்பெக்நாட் எண்ணெய்(spicknade oil) –8 சொட்டுகள்
டீ டிரி எண்ணெய் (tea tree oil) -8 சொட்டுகள்
லெமன் கிராஸ் எண்ணெய்(lemongrass oil ) -8 சொட்டுகள்
லெமன் எண்ணெய்(lemon oil) -8 சொட்டுகள்
சிடார்வுட் எண்ணெய்(cidarwood oil ) -8 சொட்டுகள்
நல்லெண்ணெய் -20 மில்லி
இவைகளைக் கலந்து வாரம் இருமுறை மசாஜ் செய்து குளித்து வர, தீராத பொடுகும் தூர ஓடும்.

கூந்தல் மசாஜ் செய்ய சில எண்ணெய்கள்:
1. தேங்காய் எண்ணெய்
2. ஆமணக்கு எண்ணெய்
3. கருஞ்சீரக எண்ணெய்
4. ஆலிவ் எண்ணெய்
5. நெல்லிக்காய் எண்ணெய்
6. செம்பருத்தி எண்ணெய்
7. கரிசலாங்கண்ணி எண்ணெய்
8. பொன்னாங்கண்ணி எண்ணெய்
9. கற்றாழை எண்ணெய்
10. சவுரிப்பழ தைலம்