12 மணி நேரம் கூண்டுக்குள் அடைப்பட்ட பிரபல நடிகை! – அதிர்ச்சியில் ரசிகர்கள்! எதற்க்காக தெரியுமா?

சினிமா

71-வது ‘கேன்ஸ் ஃபிலிம் ஃபெஸ்டிவல்’, கடந்த மே 8-ம் தேதி தொடங்கி, 19-ம் தேதி வரை பிரான்ஸில் நடைபெற்றுவருகிறது. இதில் ஐஸ்வர்யா ராய், ஹ்யுமா குரேஷி, தீபிகா படுகோன், கங்கனா ரனாவத், சோனம் கபூர், தனுஷ் போன்ற பலர் கலந்துகொண்டனர். இதில், பிரபல பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் தன்னை 12 மணிநேர கூட்டுக்குள் அடைத்துக்கொண்டு, பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக மற்றும் வன்முறைகுறித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்திவருகிறார்.

உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த திரைப்பட பிரபலங்களும் கலந்துக்கொள்ளும் இந்த விழாவில் பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அவர்கள் அவர்கள் குழந்தைகளை சுதந்திரமாய் இருக்க விடுங்கள் எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்த 12 ஆடி 8 அங்குல இரும்புக்கூண்டுக்குள் இருந்தபடி நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் என தெரிவிக்கப்படுகிறது.

சர்வதேச அரசு சாரா அமைப்பான ‘Free A Girl India’-வின் தூதராகச் செயல்படும் இவர், தன்னை 12×8 அளவுகொண்ட சிறிய ஜெயிலில் தன்னை அடைத்துக்கொண்டுள்ளார். இதுகுறித்து மல்லிகா, ” கேன்ஸ் திரைப்பட விழாவில் இது என்னுடைய 9-வது வருடம். இந்த விழாவில் விழிப்பு உணர்வு ஏற்படுத்தினால்,  உலகத்தின் எந்தவொரு மூலைக்கும் சென்று சேரும்.

இப்படி என்னை ஒரு சிறிய கூட்டுக்குள் அடைத்துக்கொள்வதால், சிறு பிள்ளைகள் வன்முறையின் காரணமாக எப்படிப்பட்ட கொடூர வதைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதை உணர முடிகிறது. இது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகின் பல்வேறு பிரச்னைகளுக்கு பெண்களும் குழந்தைகளும் பலியாக்கப்படுகிறார்கள். அவற்றுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும்” என்று கூறினார்.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.