12 வருடங்கள் கழித்து மீண்டும் சீரியல் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்த தேவயானி !! எந்த சீரியல் தெரியுமா ?? வெளியான ப்ரோமோ இதோ !!

சினிமா

தமிழ் சினிமாவில் 1996 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளிவந்த காதல் கோட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் தேவயானி.

அதனைத் தொடர்ந்து, அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் விஜய், அஜித்,விக்ரம், கமல், பிரபு, சரத்குமார், சத்யராஜ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார்.

அழகான சிரிப்பாலும், அசத்தலான நடிப்பாலும் இன்றளவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார் தேவயானி.புகழின் உச்சத்தில் இருந்த போது இயக்குனர் ராஜ்குமாரை திருமணம் செய்து கொண்ட தேவயானிக்கு இனியா, பிரியங்கா என இரு மகள்கள் இருக்கின்றனர்.

மேலும், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகளிலும் நடித்து வந்த தேவயானி தற்போது சினிமாக்களில் சிறு முக்கிய பாத்திரங்களில் நடித்து வருகிறார். இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து அசத்தியுள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் “புதுப்புது அர்த்தங்கள்” என்ற சீரியலில் தான் தேவயானி மீண்டும் நடிக்க இருக்கிறார்.

இந்த தொடரின் புரோமோ வெளியாகியுள்ளது.ஒரு குடும்ப தலைவியின் கதையை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த சீரியல் ஹிட்டடிக்கும் என்பதில் எந்தத் சந்தேகமும் இல்லை.

தற்போது இந்த புரோமோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதேவேளை, 12 வருடங்கள் கழித்து மீண்டும் கோலங்கள் ஜோடியான அபி பாஸ்கர் ஜோடி இணைய உள்ளனர்.