13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை மணந்த விவகாரம்: இணைந்து வாழ்வது குறித்து அதிர்ச்சி முடிவு!

செய்திகள்

இந்தியாவில் 13 வயது சிறுவன் 23 வயது பெண்ணை திருமணம் செய்திருக்கும் சம்பவம் வைரலாக பரவி வருகிறது. ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டம், கவுதாளம் மண்டலம், உப்பரஹால் கிராமத்தை சேர்ந்த ஐய்யாம்மா என்ற சிறுவனின் அக்காள் மகளான 23 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த மாதம் 27-ஆம் திகதி அதிகாலை 3 மணிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது.

சிறுவனும் குறித்த பென்ணும் அடிக்கடி வீட்டிற்கு சென்று வரும் போது இருவருக்கும் காதல் ஏற்பட்டதன் காரணமாகவே பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது.சிறுவனும், அந்த பெண்ணும் திருமணம் செய்து கொண்ட புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இப்படி ஒரு திருமணம் நடைபெற்றிருந்தாலும், 13 வயது சிறுவன் மைனர் என்பதை அறிந்தும் 23 வயது இளம்பெண்னுடன் அவரது பெற்றோர்கள் எப்படி திருமணம் செய்து வைத்தார்கள் என்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..

இந்நிலையில் சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்கள் தலைமறைவாகி உள்ளதாகவும், இப்படி ஒரு திருமணத்தை செய்து வைத்த பெற்றோரை உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கூறி வந்தனர்.

இன் நிலையில் சிறுவர் மற்றும் மகளிர் நலத் துறையின் உதவியாளர் விஜயா ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று இந்த திருமணம் சட்டத்துக்கு புறம்பானது என கூறினார்கள். ஆட்சியர் சத்யநாராயணா முன்னிலையில் புதுமண தம்பதிகள் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்களின் குடும்பத்தாரும் உடன் இருந்தனர். அப்போது அவர்களிடம் பேசிய ஆட்சியர், இந்த திருமணம் தற்போது செல்லாது, சிறுவனுக்கு 21 வயது ஆன பின்னர் மனைவியுடன் அவர் சேர்ந்து வாழலாம்.அதுவரை சிறுவன் அவன் வீட்டிலும், அவன் மனைவி அவரது பெற்றோருடனும் தான் தங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக குடும்பத்தாருக்கும் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டது.

Thank You for Visiting Our site. We hope you found something that sparked interest on our website. if you like our content means please share and support, and also like our Facebook page.