தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப்படங்களில் நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்ததை பெற்று வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
சமீபகாலமாக சினிமாவில் போதிய வரவேற்பு இல்லாமல் நடித்த படங்கள் தோல்வியை சந்தித்து வந்ததால் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.
சமீபத்தில் நடிகர் விஜய் – கீர்த்தி சுரேஷ் பற்றிய விவகாரம் இணையத்தில் தீயாய் பரவி அதிர்ச்சியை கொடுத்து வந்தது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பத்திரிக்கையாளர் பிஸ்மி ஒரு தகவலை பகிர்ந்துள்ளார்.
கீர்த்தி சுரேஷின் குடும்பத்தின் நெருங்கிய நண்பர் தன்னிடம் கீர்த்தி சுரேஷின் காதல் பற்றி கூறியிருந்தார்.
பள்ளிபருவ காலத்தில் இருந்து கீர்த்தி சுரேஷ், ஒருவரை 13 வருடமாக காதலித்து வருவதாகவும் அவருடன் திருமணம் செய்ய இரு வீட்டாலும் சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் கூறினார். பல இடங்களில் ரிசார்ட் வைத்திருக்கும் நபர் தான் கீர்த்தி சுரேஷின் காதலராம்.
இந்நிலையில் திருமணத்திற்கு தயாராக 4 வருடங்கள் டைம் கேட்டிருப்பதால் படங்களில் கமிட்டாகாமல் இருக்கும் படத்தினை முடிக்கவுள்ளாராம். அதேபோல் நடிக்காமல் விளம்பர படங்களில் மட்டும் கவனம் செலுத்தி வருவதை ரெட்டிசன்கள் பலர் கிண்டலடித்தும் வருகிறார்கள்.
View this post on Instagram